மக்களால் புரிந்து கொள்ள முடியாத சில உளவியல் உண்மைகள் யாவை?
ஒருவர் பயத்தில் அல்லது துன்பத்தில் இருந்தால் அவர்களது கைகளை பிடித்து கொண்டால் அவர்களுக்கு ஒரு வித மன நிம்மதி கிடைக்கும்.

வெறும் நான்கே நிமிடங்களில் நாம் காதலில் விழுந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. குறுகிய காலத்தில் வந்து வாழ்கையின் போக்கையே மாற்றி விடுகிறது.

ஒரு பழக்கத்தை நாம் பழக்கி கொள்ள 21 நாட்கள் தேவைப்படுகின்றது. அதனால் தான் பல தியான வகுப்புகள் குறைந்தது 21 நாட்கள் நடத்தப்படுகின்றது.

வேலை நேரத்தில் பாடல்களை கேட்பதன் மூலம் வேலை திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகமாக சிரிப்பதன் மூலம் நம் மூளை நாம் சந்தோசமாக இருக்கிறது என்று நம்பும். அதனால் தான் பெரியவர்கள் துன்பம் வரும் சிரியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.


நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்காக செலவிடும் பொழுது அதிக சந்தோசம் கிடைக்கும்.

நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அல்லது வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருவார்கள்.

90% சதவிகிதம் மக்கள் நேரில் பேச முடியாத விடயங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்புகிறார்கள்.

18 முதல் 33 வயது உள்ளவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது.

70% சதவிகிதம் கனவுகள் உங்கள் வாழ்கையில் ரகசியத்தை தாங்கி வருகிறதாம். அதில் உங்கள் வாழ்கையில் நடக்க போகும் நிகழ்வுகள் கூட இருக்கலாம்.

அதிக புத்தி கூர்மை உள்ள பெண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்து கொள்கிறார்களாம்.


உலகின் பெரும்பாலான ஆண்கள் தங்கள் தாயின் எலும்பு வடிவத்தை ஒட்டிய பெண்ணைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதற்கு அறிவியல் ரீதியாக செக்ஸுவல் இம்ப்ரின்டிங் என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் காதல் அம்மா ஆயிற்றே.