செவ்வாய், 17 நவம்பர், 2020

கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் - அசத்தும் காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுவுடன் கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.

கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் - அசத்தும் காஜல் அகர்வால்


கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் - அசத்தும் காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்த கையோடு இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.