Advertisement

கபாலி மாதிரி வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி என்ட்ரி?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suresh Chakaravarthi re-entry like Kabali in Bigg boss house


அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் இன்றுடன் 50 நாட்களை எட்டியுள்ளது.  5-வது வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேற்றப்பட்டார்.


சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி பேசிய கமல், ஒவ்வொரு முடிவும் தொடக்கம் தான். சுரேஷை நான் வெளியில் அனுப்பவில்லை. நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள். அவர் வெளியேறியதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம். சுரேஷாகவும் இருக்கலாம். என்னவென்று விவாதியுங்கள் என்று கமல் தனது பேச்சில் ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார். அதேபோல் பிக்பாஸ் வீட்டில் தனது குசும்புத்தனமான நடவடிக்கைகளால் அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் சுரேஷ் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று பார்வையாளர்களும் கருதினர்.


சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.