Advertisement

காய்கறிகளை பயன்படுத்த ஸ்மார்ட் டிப்ஸ்! Smart Kitchen Tips, Amma Samayal.

காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி? 
காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி?
காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி? 


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கரைசலில் நாம் வாங்கிய காய்கறிகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் ரசாயன நச்சுக்கள் இன்றி காய்கறிகள் சுத்தமாகும். நன்கு அலசிய பின் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தவும். மஞ்சள், உப்புக்கு கரைசலுக்கு பதிலாக சிறிதளவு வினிகர் சேர்த்தும் காய்கறிகளை சுத்தப்படுத்தலாம்.


பச்சைமிளகாய் பாதுகாப்பு டிப்ஸ்.

பச்சை மிளகாயை காம்புடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் அழுகிவிடும். காம்பை எடுத்துவிட்டு வெறும் மிளகாய் மட்டும் வைத்தால், மிளகாயும் அழுகாது, இரண்டு மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம். 


பச்சைமிளகாய் நறுக்கும் பொழுது கையில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க நறுக்குவதற்கு முன் கைகளில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி கொண்டு பச்சை மிளகாய் நறுக்கவும். எரிச்சல் வராது.


இஞ்சி உரிப்பது இவ்வளவு சுலபமா!

மேல்தோலை எடுக்க கத்திக்கு பதிலாக, ஷார்ப்பான ஸ்பூன் பயன்படுத்தினால் இஞ்சி தோல் உரிப்பது ஈஸியான வேலை!!


ரெடிமேடு இஞ்சி, பூண்டு பேஸ்ட்

சமையல் நேரத்தை மிச்சப்படுத்த ரெடிமேடு இஞ்சி, பூண்டு பேஸ்ட்


முதலில் இஞ்சி, பூண்டு சம அளவு எடுத்து விழுதாக அரைக்கவும். சிறிது உப்பு சேர்த்தபின் இந்தக் கலவையை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவையான போது தேவையான அளவு எடுத்து உபயோகப் படுத்தலாம். நீண்ட நாட்களுக்கு கெடாது !!


பூண்டு உரிக்க ஈஸி டிப்ஸ்.

ஒரு வாணலியில்  உரிக்க வேண்டிய பூண்டு பற்களை போட்டு மிதமாக சூடு படுத்தவும். இப்பொழுது உரித்துப் பாருங்கள்! உரிக்க சுலபமாக இருக்கும்.


வெங்காயம் நறுக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க.

பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது வெங்காயம் நறுக்க தொடங்குங்கள்! நோ கண்ணீர்! நோ எரிச்சல்!!