Advertisement

Cloves : கிராம்பில் இத்தனை நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாமல் தினமும் இரண்டு சாப்பிட்டு வாருங்கள்..!

Cloves : கிராம்பில் இத்தனை நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாமல் தினமும் இரண்டு சாப்பிட்டு வாருங்கள்..!


கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள்.


Cloves benefits in Tamil language.

நோய் எதிர்ப்பு சக்தி : 

கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.

Cloves benefits in Tamil language.

செரிமாணம் : 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். அதற்கு காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.

Cloves benefits in Tamil language.

கல்லீரல் ஆரோக்கியம் : 

கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Cloves benefits in Tamil language.

பல்லுக்கு உறுதி : 

பல்வலியைத் தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாக பற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல்வலியைக் குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.

Cloves benefits in Tamil language.

தலைவலிக்கு நிவாரணி : 

கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு ஒரு அற்புதமான தீர்வாக இருக்கிறது.எனவே வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.

Cloves benefits in Tamil language.

எலும்புகளுக்கு வலிமை : 

கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

Cloves benefits in Tamil language.

வாய் கிருமிகளை நீக்கும் : 

காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம்.

Cloves benefits in Tamil language.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் : 

நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.

Cloves benefits in Tamil language.

புற்றுநோயை தடுக்கிறது : 

கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. அவை உங்கள் உடலை நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.

Cloves benefits in Tamil language.

சுவாசப்பாதை ஆரோக்கியம் : 

ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.

Cloves benefits in Tamil language.

மன அழுத்தம் நீக்கி : 

கிராம்பு மன அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மேலும் காலையில் அவற்றை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.

Cloves benefits in Tamil language.

நோய் எதிர்ப்பு சக்தி : 

கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.