Advertisement

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

ஃப்ரெஷ் புதினாக் கீரை 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க வழி இருக்கு!


கையில் எடுக்கும்போதே வாசனையில் நம்மை கட்டிப்போடும் அளவிற்கு மிகுந்த மனம் வீசும் பண்பு கொண்டது புதினா.

Mint Safety Tips In Tamil : மனிதனுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் முக்கிய உணவுகளில் ஒன்று கீரைகள். நாள்தோறும் கீரைகளை உணவில் சேர்த்கொண்டால் நோய் இல்லாமல் வாழலாம் என்பது நம் முன்னோர்கள் கூறியது. அதே வார்த்தையை தற்போது மருத்தவர்களும் கூறி வருகின்றனர். பழங்காலம் முதற்கொண்டு தற்போதுவரை அனைவரும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துவதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் கீரையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று…

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.
புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

ஒவ்வொரு கீரைக்கும் ஒருவகையான தனித்தன்மை உண்டு. அந்த வகையில் கையில் எடுக்கும்போதே வாசனையில் நம்மை கட்டிப்போடும் அளவிற்கு மிகுந்த மனம் வீசும் பண்பு கொண்டது புதினா. இயற்கை மருத்துவத்தில் புதினாவிற்கு தனி இடம் உண்டு. இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நமது உணவில் தினமும் புதினா இலைகளை சேர்த்து வரும்போது, ஜீரண பிரச்சனைகள், வயிற்றுக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்து, பசியை தூண்டுதல். ரத்தத்தை  சுத்தமாக்கி புத்துணர்ச்சி அளித்தல் போன்ற நன்மைகளை தருகிறது.

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

புதினா இலைகளை வெறும் வாயில் மென்று தின்றால் வயிறு உப்பசம் நீங்கி புத்துணர்ச்சியை கொடுக்கும். புதினா இலைகளின் சாறு மூச்சு திணறல் பிரச்சனையை குணப்படுத்தும். இப்படி பலவகை மருத்துவ குணங்களை கொண்ட புதினா இலைகளை நாம் வாங்கி வரும்போது இரண்ரொரு நாட்களில் இலைகள் அழுகிபோகும் நிலை ஏற்பட்டு அதை பயன்படுத்த முடியாமல போகும். இதனை சரி செய்ய ஒரு சில வழிகள் உள்ளது. இந்த வழிகளில் புதினாவை நீங்கள் பாதுகாத்தால், 10 நாட்கள் வரை புதினா ஃப்ரஷ்ஷாக இருக்கும்.

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

புதினா இலைகளை வாங்கி வரும் பொழுதே நல்ல சுத்தமான இலைகளாக பார்த்து வாங்கி வர வேண்டும். அந்த புதினா கட்டை வீட்டிற்கு வந்தவுடன் பிரித்து தனித்தனியாக எடுத்து கையில் பிடித்து லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது, அந்த புதினாவில் இருக்கும் சிறு சிறு வண்டுகள், பூச்சிகள் அனைத்தும் கீழே விழுந்துவிடும். அதன்பிறகு அதை பயன்படுத்தலாம்.

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

கடைசியில் இருந்து புதினா வாங்கி வரும்போது ஈரப்பத்துடன் இருக்கும். ஆனால் வீட்டிங்கு வந்த அதை அப்படியே வைத்து விட்டால் இரண்டே நாட்களில் அழுகிப் போய் விடும். அதனை பிரித்து புதினா இலைகளை ஒவ்வொன்றாக கில்லி, காய வைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்க வேண்டும். அதிலும் புதினா இலைகளை பாலிதீன் பையில் வைக்கும் போதும் அழுகிப் போகும் அல்லது காய்ந்து வறண்டு போய் நிறம் மாறி போய்விடும். அவ்வாறு ஆகாமால் இருக்க  ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது எத்தனை நாட்கள் ஆனாலும் அது அப்படியே  நிறம் மாறாமல் இருக்கும். அதே நேரத்தில் அதன் குணம் மாறாமல் இருக்கும்.

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

புதினா கீரையை அப்படியே காம்புடன் வைத்தாலும் இதே நிலைமை தான் ஏற்படும். அதனால், புதினாவை தண்ணீரில் அலசிவிட்டு இலைகளை கில்லி காய வைத்து அதனை அதன்பிறகு பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதினா காம்புகளை வீட்டில் நட்டு வைத்தால் 10 நாட்களில் முளைக்க தொடங்கும். அதன்பிறகு நாம் வீட்டிலேயே புதினா எடுத்தக்கொள்ளலாம்.