நானும் மனுஷன் தான். இதுக்கு மேல தாங்க முடியாது. சூப்பர் சிங்கர் ஷோவை விட்டு விலகும் பென்னி தயாள்!
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரபல பின்னணி பாடகரும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் அதிரடியாக அறிவித்து இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் 8வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பல ஆண்டுகளாக இந்த ஷோவில் நடுவராக பணியாற்றினார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நடுவராக இருக்கிறார். மேலும், பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர்.
வேற லெவல் வெற்றி
நல்லா பாட தெரிந்த பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என ஒளிபரப்பாகி வரும் இரு நிகழ்ச்சிகளும் வேற லெவல் வெற்றி பெற்றன. மேலும், பல பின்னணி பாடகர்களை தமிழ் சினிமாவுக்கு இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பென்னி தயாள்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பல கண்டுபிடிப்புகளில் பென்னி தயாளும் ஒருவர். தமிழில் பாபா படத்தில் இடம்பெற்ற மாயா மாயா பாடல் மூலம் அறிமுகமானார்.
சூப்பர் சிங்கர் ஜட்ஜ்
சிவாஜி, பொல்லாதவன், அழகிய தமிழ் மகன், தாம் தூம், அயன், ராவணன், 7ஆம் அறிவு, விஸ்வரூபம், 24, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு பாடியுள்ள இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களாக நடுவராக இருந்து வருகிறார்.
இனி வரமாட்டேன்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த எலிமினேஷன் காரணமாக தொடர்ந்து ஏகப்பட்ட ஹேட் மெசேஜ்கள் வந்த நிலையில், அடுத்த சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிரடியாக பென்னி தயாள் அறிவித்துள்ளார்.
நானும் மனுஷன் தான்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக இனி எந்தவொரு அறிவிப்பையும் சமூக வலை தளங்களில் வெளியிடப் போவதில்லை என்றும், நானும் மனுஷன் தான் இப்படி தொடர்ந்து என்னைப் பற்றி மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருவதை பார்த்து என்னால் சுமமா இருக்க முடியாது என சோஷியல் மீடியா புல்லிங்கிற்கு எதிராக கொதித்து எழுந்து இருக்கிறார்.
அப்படி என்ன பிரச்சனை
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ஸ்ரீதர் சேனா எனும் போட்டியாளரை நடுவர்கள் வெளியேற்றியதற்கு எதிராக ஏகப்பட்ட சூப்பர் சிங்கர் ரசிகர்கள் இவரை உண்டு இல்லை என ஆக்கி உள்ளனர். டைட்டில் வின் பண்ணும் அளவுக்கு ஸ்ரீதர் சேனாவுக்கு திறமை இருப்பதாக பாராட்டி விட்டு திடீரென வெளியேற்றினால் என்ன அர்த்தம் என்று விளாசி உள்ளனர்.
ஏமாத்துறாங்க
ஏற்கனவே விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வெளியாகி வருகின்றன. சூப்பர் சிங்கர் டைட்டில் கொடுக்கும் போதும் மக்களின் ஓட்டுக்கு மாறாக அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு டைட்டிலை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீதர் சேனாவை வெளியேற்றி நல்லா ஏமாத்துறாங்க என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இனி பார்க்க மாட்டோம்
ரியாலிட்டி ஷோ என விளம்பரப்படுத்தி விட்டு உங்க இஷ்டத்துக்கு நடத்துற டிராமடிக் ஷோவை இனிமேல் நாங்க பார்க்க மாட்டோம் என ஏகப்பட்ட சூப்பர் சிங்கர் ரசிகர்கள் விஜய் டிவி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அதில் உள்ள நடுவர்கள் என பலரையும் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பென்னி தயாள் இப்படியொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அவரை விட
கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ரீதர் சேனாவை விட மீதமுள்ளவர்களில் திறமையான பாடகர் யார் என்று சொல்லுங்கள் பென்னி தயாள் என தனிப்பட்ட முறையிலும் அவருக்கு ஏகப்பட்ட டார்ச்சர் மெசேஜ்கள் குவியவே இப்படியொரு அறிவிப்பை பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் எடுத்துள்ளார்.
யாருக்கு டைட்டில்
சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் காரணமாகத்தான் இப்படியொரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள், யாருக்கு டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அபிலாஷ், மானஸி, முத்து சிற்பி, அய்யனார், அனு ஆனந்த், பரத் மற்றும் ஆதித்யா உள்ளிட்டவர்கள் மீதமுள்ளனர்.