காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் இந்த உணவுகளை தவறி கூட சாப்பிடாதீங்க..!
காலை எழுந்ததும் பல் துலக்கியதும் நேராக கிச்சன் சென்று செய்யும் முதல் வேலை டீ, காஃபி குடிப்பதுதான். ஆனால் அதுவே தவறான பழக்கம் என்கின்றனர் மருத்துவர்கள். இப்படி என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
காஃபி , டீ தவிர்க்கவும் : காஃபி , டீ குடிப்பது இரப்பையில் அலர்ஜியை உண்டாக்குமாம். செரிமாணத்தை பாதிக்குமமாம் எனவே பால் சார்ந்த திரவங்களை தவிர்த்து சூடான நீர், இஞ்சி டீ, புதினா, துளசி டீ என ஹெர்பல் டீ வகைகளைக் குடிக்கலாம்.
காரமான உணவுகள் : காரமான உணவுகளும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். அதற்கு பதிலாக நட்ஸ் வகைகள், ஜூஸ் பழங்கள் சாப்பிடலாம்.
புளிப்பான பழங்கள் : புளிப்பான பழங்களில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். எனவே அதற்கு பதிலாக பப்பாளி, தர்பூசணி, ஆப்பில் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
இனிப்பு சுவை உணவு : காலையிலேயே இனிப்பாக சாப்பிடுவது இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதனால் நீரிழ்வு நோய் உருவாகலாம். தேனைக் கூட அப்படியே சாப்பிடாமல் எலுமிச்சையில் கலந்து சாப்பிடலாம். சூடான நீரில் கலந்து சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
வாழைப்பழம் : வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்ததில் மெக்னீசியம் அளவு அதிகரிக்கும். இது இதய பாதிப்பை உண்டாக்கலாம். இதற்கு பதிலாக இரவு வெந்தயம் ஊற வைத்து மறுநாள் சாப்பிட்டால் உடல் குளுமையாகும்.
பேக்கரி உணவுகள் : பிரெட், பன் போன்றவற்றில் இருக்கும் ஈஸ்ட் வயிற்று மந்தத்தை உண்டாக்கும். இதை தவிர்க்க தானிய வகைகளில் செய்யப்பட்ட ஈஸ்ட் இல்லாத பிரெட் வகைகளை சாப்பிடலாம்.
தயிர் : தயிரை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வயிற்றில் சுரந்துள்ள அமிலம் கொன்றுவிடும். இதனால் எந்தப் பலனும் இல்லை. அதற்கு பதிலாக அரிசி கஞ்சி குடிக்கலாம்.
குளிர்பானங்கள் : கியாஸ் நிறைந்த, அதிகம் சர்க்கரைக் கொண்ட குளிர்பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிறுங்கள். அதற்கு பதிலாக அஜீரனம், வயிற்று கோளாறுக்கு சீரகத் தண்ணீர் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
தானியங்கள் : தானியங்களை அப்படியே சாப்பிடாமல் முளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் நல்லது.