Advertisement

உடல் எடையையும், தொப்பையையும் வெறும் 10 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைக்க, இதைவிட பெஸ்ட் டிப்ஸ் வேற எதுவுமே இருக்க முடியாதுங்க!

உடல் எடையையும், தொப்பையையும் வெறும் 10 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைக்க, இதைவிட பெஸ்ட் டிப்ஸ் வேற எதுவுமே இருக்க முடியாதுங்க!

உடல் எடையை குறைப்பதற்கு எத்தனையோ வகையான வழிமுறைகள் இயற்கையான முறையில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் நம்முடைய உடலுக்கு எது சரிவரும்? என்பதை பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதும் நம் கையில் உள்ளது. உடல் எடையை குறைக்க, எல்லோருக்கும் ஏதுவான ஒரு பெஸ்ட் டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெகு சீக்கிரமாக குறிப்பிட்ட அளவு எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருபவர்கள் தாராளமாக இந்த குறிப்பை பின்பற்றலாம். எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ரெமிடி உங்களுக்காக!

karunjeeragam

இந்த பானத்தை செய்ய தேவையான பொருட்கள். கருஞ்சீரகப் பொடி, சுக்குப் பொடி, தேன் அல்லது நாட்டு சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு. கருஞ்சீரகத்தையும் சுக்கையும் பொடியாக வாங்கி வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அல்லது முழு கருஞ்சீரகத்தையும் சுக்கையும் வாங்கி உங்கள் வீட்டு மிக்சியில் நீங்களே பொடித்து வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200ml அளவு தண்ணீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடு செய்யுங்கள். அந்த தண்ணீர் சூடானதும் சுக்கு தூள் – 1/2 ஸ்பூன், கருஞ்சீரக தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து அந்த தண்ணீர் நன்றாக சூடான உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். தளதளவென கொதிக்க வைக்க வேண்டாம். கை பொறுக்கும் சூடு குடிக்கும் சூடு வரை இந்த பானத்தை சுட வைத்தால் மட்டுமே போதுமானது.

sukku

அதன் பின்பு இதை வடிகட்டி ஒரு டம்ளரில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் சுவைக்கு ஏற்ப தேன் கலந்து கொள்ளலாம் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து சூடாக இருக்கும் போதே குடித்துவிட வேண்டும். இதற்காக ரொம்பவும் கொதிக்க கொதிக்க குடித்துவிட வேண்டாம்.

வாய் பொறுக்கும் சூடு, வெதுவெதுப்பாக இருக்கும் அளவில் நாம் பருகிவிட வேண்டும். இதை குறிப்பாக எப்போது குடிக்க வேண்டும்? இரவு 8 மணிக்கே உங்களது டின்னரை முடித்து விட வேண்டும். 9 மணிக்கு இந்த பானத்தை வெதுவெதுப்பாக குடித்துவிட்டு 1/2 மணி நேரம் கழித்து தூங்க செல்ல வேண்டும்.

kasayam

முறையான உடற்பயிற்சியோடு இதை ஒரு டம்ளர் தினம்தோறும் குளித்து வந்தால் வெறும் 10 நாட்களில் நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவு உடல் எடையை உங்களால் நிச்சயம் குறைக்க முடியும். சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் தெரியும்.