நரம்பு பிரச்சனை, சர்க்கரை வியாதி, கெட்ட கொழுப்பு பிரச்சனை, மாரடைப்பு இவை அனைத்தும் ஆயுசுக்கும் உங்கள் பக்கம் வராது. இதை மட்டும் 1 டம்ளர் குடிச்சுப் பாருங்க!
இன்றைய சூழ்நிலையில் 40 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு கூட சர்க்கரை வியாதி வந்து விடுகின்றது. சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அதை தொடர்ந்து நரம்பு பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சனை என்று தொடர்ந்து பல பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க, நம் உடலில் இருக்கும் மற்ற உறுப்புகளும் சீராக செயல்பட, நரம்பு பிரச்சனையை தவிர்க்க, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே ஒரு பானத்தை தயார் செய்யப் போகின்றோம்.
சர்க்கரையின் அளவு சீராக இருந்து கொலஸ்ட்ரால் சீராக இருந்து விட்டாலே போதும். மாரடைப்பு வருவதை தடுத்து விடலாம். ஆக மொத்தத்தில் நம் ஆரோக்கியத்துக்கு ஆயுசுக்கும் கேரன்டி தரும் ஒரு பானத்தை சுலபமான முறையில் எப்படி தயார் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் வெந்தயம், கருவேப்பிலை 1 கொத்து, இஞ்சி துருவல் – 1/4 ஸ்பூன், பட்டை 1 சிறிய துண்டு, இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் ஆகும் அளவிற்கு கொதித்து சுண்டிய பின்பு, வடிகட்டியின் மூலம் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி கொஞ்சம் வெதுவெதுப்பாக காலை வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும்.
இந்த தண்ணீரை குடித்த பின்பு நடைபயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம். இந்த பானத்தை குடித்து 1/2 மணி நேரம் கழித்து தான் மற்ற ஆகாரங்களை சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தினம்தோறும் இந்த கசாயத்தினை குடித்த வரலாம். தவறொன்றும் கிடையாது. சக்கரையை முழுமையாக கட்டுப்படுத்தி நம் உடலில் இருக்கும் உள் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பானம் நமக்கு உதவியாக இருக்கும்.
வெந்தயத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல் போன்ற சத்துக்களை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் சரியாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மையும் வெந்தயத்திற்கு உண்டு. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனை களையும் சரிசெய்யக் கூடிய தன்மை இந்த வெந்தயத்திற்கு உண்டு.
அடுத்தபடியாக கருவேப்பிள்ளை. உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின், ஆன்ட்டி ஆக்சிஜன் இவைகளை கொடுக்கின்றது. கருவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய சக்தியும் இந்த கறிவேப்பிலைக்கு உண்டு. முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்வதற்கு இஞ்சிக்கும் முதலிடம் உண்டு. அடுத்தபடியாக பட்டை, இந்தப் பட்டையை நாம் கஷாயத்தில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலில் இன்சுலின் சுரப்பி அதிகரிக்கப்படும். நீங்கள் ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்களாக இருந்தால் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். முடிந்தவர்கள் தினம்தோறும் இந்த பானத்தை தயார் செய்து குடிக்கலாம். முடியாதவர்கள் வாரத்தில் 3 நாட்கள் குடித்து பலனடையலாம்.