வீட்டில் இருக்கும் இந்த 3 பொருள் 1 மாதத்தில் உங்கள் சருமத்தை மேடு பள்ளம் இல்லாமல் பளபளப்பாக மாற்றுமே!
அனைவருக்குமே தங்களுடைய சருமம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் பதின் பருவத்தின் பிறகு சருமமானது லேசாக மாறத் துவங்கும். அது இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதனை நீக்குவது ஒன்றும் சிரமமான காரியமல்ல! இதற்கு பெரிதாக செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இதனை சரி செய்து விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சருமத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்கள் வழியாக சேரும் அழுக்குகள் நாளடைவில் பருக்களாக மாதிரி பிரச்சினையை உண்டு பண்ணுகின்றன. அதன் பிறகு அதன் வடுக்கள் மாறாமல் பள்ளமாக சருமத்தை ஆக்கிவிடுகின்றது. இப்படி ஒவ்வொரு துவாரங்கள் வழியாக அழுக்குகள் நுழைந்து சருமத்தின் அழகை சீர் குலைத்து விடுகின்றன.
எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். வறண்ட சருமம் உடையவர்கள் பழங்களை முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் மிருதுவாகும். பயத்தம் மாவு அரைத்து வைத்துக் கொண்டு அதனை முகம் மற்றும் உடல் முழுக்க தேய்த்து சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தில் இருக்கும் மேடு பள்ளங்கள் நீங்கி பளபளப்பான மேனி பெற வேப்ப இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நசுக்கி ஒரு 2 டீஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கற்றாழையை கிழித்து அதில் இருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்து நன்கு தண்ணீரில் அலசி மசித்துக் கொள்ளுங்கள்.
கற்றாழையை மசியும் பொழுது அதிலிருந்து வரும் பசை போன்ற திரவம் முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனுடன் எடுத்துவைத்த வேப்ப சாற்றை கலந்து சுத்தமான மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்து பசை போல் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பசையை முகத்தில் நன்கு தடவி கொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி உலர வைத்து அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் மாசுமருவற்ற சருமம் ஏற்படத் துவங்கும். நீங்கள் ஒரு மாதம் இப்படி செய்தால் போதும் உங்கள் முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்கள் எங்கு போனது என்றே தெரியாமல் காணாமல் மறைந்து இருக்கும். முகப் பருக்கள், மாசுகள், மருக்கள் எதுவுமே இருக்காது. இதுபோல் சரியாக முப்பது நாட்கள் மட்டும் செய்து பாருங்கள் உங்களுக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முகம் பளபளவென்று பட்டு போல மிருதுவாக மாறி இருக்கும்.