Advertisement

30 நாட்களில் உங்களுடைய எலும்புகள் உறுதி பெற்று, நீங்களும் இரும்பு மனிதராக மாறலாம். வலுவிழந்த எலும்புகளை உறுதிப்படுத்த 1 டம்ளர் இதை குடித்தாலே போதும்.

30 நாட்களில் உங்களுடைய எலும்புகள் உறுதி பெற்று, நீங்களும் இரும்பு மனிதராக மாறலாம். வலுவிழந்த எலும்புகளை உறுதிப்படுத்த 1 டம்ளர் இதை குடித்தாலே போதும்.

நம்முடைய எலும்புகள் வலுவிழந்து போவதற்கு முதல் காரணம், நம்முடைய உணவு பழக்கவழக்கத்தில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவுகளில் செயற்கை கலந்த ரசாயன பொருட்களை அதிகம் உள்ளது. 80 வயது பாட்டியால் நிமிர்ந்து நடக்க முடிகிறது. 40 வயதை கடந்த நம்மால் எந்த வேலையும் செய்ய முடிவது கிடையாது. காரணம் எலும்புகளின் தேய்மானம். கழுத்து வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என்ற பிரச்சனை ஆண்களுக்கும் வந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு 30 வயதிலேயே வந்துவிடுகிறது. பிரசவத்திற்குப் பின்பு, பெண்களுக்கு உடலில் வலு சேர்ப்பதற்கு கட்டாயம் இந்த ஆரோக்கியமான பானத்தை தயார் செய்து தொடர்ந்து குடித்து வரவேண்டும்.

badham

தொடர்ந்து இந்த ஹெல்த் டிரிங் கை சிரமம் பார்க்காமல் 30 நாட்கள் குடித்து வந்தாலே, உங்களுடைய ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை உணரலாம். சிலபேருக்கு எல்லாம் கீழே லேசாக விழுந்தாலே, கையில் உள்ள எலும்புகளில், காலிங் உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு கட்டும் நிலைமைக்குப் போய்விடுவார்கள். இப்படி உடைந்த எலும்புகள் சீக்கிரமாக கூடுவதற்கும் இந்த ஆரோக்கியமான பானம் உதவியாக இருக்கும். சரி, அதை எப்படி தயார் செய்வது என்னென்ன பொருட்களை எந்தெந்த அளவில் சேர்ப்பது என்று பார்த்துவிடலாமா?

முதலில் உடலுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், புரோட்டீன், வைட்டமின் டி, இந்த நான்கு சத்துகளும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் எலும்புகள் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்கும். இதில் ஏதாவது ஒரு சத்து குறைந்து விட்டாலும் எலும்புகள் வலுவிழக்கத்தான் செய்யும். இப்போது இந்த சத்துக்களை நம்முடைய உடம்பில் எப்படி சேர்ப்பது?

dates

பேரிச்சம்பழம் – 5, பாதம் கொட்டைகள் – 10, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன், தேங்காய் பால் – 1/4 கப், காய்ச்சிய பசும்பால் – 3/4 கப், இந்த ஹெல்த் டிரிங்க் செய்ய இவைதான் தேவையான பொருட்கள். ஏலக்காய் வாசம் பிடித்தவர்கள் ஏலக்காய் பொடியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்த நாள் இந்த ஹெல்த் டிரிங்க் செய்ய வேண்டும் என்றால், முந்தைய நாள் இரவே கொஞ்சமாக தண்ணீரில் பேரீச்சம் பழத்தையும், பாதாம் கொட்டைகளையும், ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் கொட்டைகள் பாதாம் பருப்பை மட்டும் சேர்த்து விட்டு, இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதுபோல் அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

badam-paste

கொஞ்சமாக தேங்காயை துருவி 1/4 கப் அளவு தேங்காய் பாலையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பசும்பாலை நன்றாக காய்ச்சி அதையும் ஒரு பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளரில் தயாராக இருக்கும் தேங்காய் பாலை முதலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பசும்பாலை ஊற்றி கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்டில் 3 விருந்து 4 ஸ்பூன் அளவு, இந்த பாலோடு நன்றாக கலந்து கொள்ளுங்கள். வெதுவெதுப்பான பாலில் தான் கலக்கவேண்டும். இறுதியாக நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன் கலந்து, தேவைப்படுபவர்கள் ஏலக்காய் தூளையும் போட்டு பருகி விட வேண்டியதுதான்.

coconut-milk

இதில் மிக்ஸி ஜாரில் அரைத்த பேஸ்ட் மட்டும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதை கைபடாமல் எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ரொம்ப நாளைக்கு பிரிட்ஜில் வைத்து அதை பயன்படுத்த வேண்டாம்.

bone

கொஞ்சம் இந்த ஹெல்த் ட்ரிங்கை தயாரிக்க சிரமப்பட வேண்டிய வேலை இருக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக உகந்தது. இது 30 நாட்கள் விடாமல் தொடர்ந்து குடித்து வந்தால், உங்களுடைய உடலில் நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். உடலின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.