குழந்தைகள் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 பொருட்கள்? இந்த ஐந்து பொருட்களை கொடுத்தால் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக, கொழுகொழுவென மாறுமாம்!

குழந்தைகள் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 பொருட்கள்? இந்த ஐந்து பொருட்களை கொடுத்தால் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக, கொழுகொழுவென மாறுமாம்!

ஒரு குழந்தை பிறந்தது முதல் 5 வருடம் வரை அதற்கு கொடுக்கும் ஊட்டச்சத்து உணவு தான் எதிர்கால ஆரோக்கியத்தை வளமாக செய்கிறது. இந்த முதல் ஐந்து வருடத்தில் ஒவ்வொரு குழந்தையும் சராசரியான ஊட்டச்சத்தை பெற்றிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் இந்த உணவு வகைகள் இயல்பாகவே இடம் பெற்றிருக்கும். ஆனால் இன்று நவீன கால தாய்மார்கள் இவற்றில் கவனம் செலுத்துவதை குறைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கிய உணவில் இடம் பெற வேண்டிய முக்கிய 5 பொருட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமல்ல! அதன் பிறகு வளரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், பெரியவர்களுக்கும் கூட இந்த ஐந்து பொருட்கள் கட்டாயம் ஒவ்வொரு உணவிலும் இடம் பெறும் பொழுது இயல்பாகவே உடல் ஆரோக்கியம் பெறுகிறது. இதனால் எந்த வகையான நோய்களையும் எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாகிறது. உடலுக்கு ஒவ்வாத, மலச்சிக்கலை உண்டாக்கக்கூடிய பீட்சா, பர்கர், சான்விச், நூடுல்ஸ் போன்ற மைதா கலந்த உணவு வகைகளை விரும்பி ஏற்கும் இன்றைய தலைமுறையினர் இந்த ஐந்து வகைகளை விரும்பி ஏற்றுக் கொண்டால் நூறு வயது வரை நலமுடன் வாழலாம்.

1. பால்:

donkey milkஇன்று பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடின்றி, வயது வித்தியாசம் இன்றியும் எலும்பு தேய்மானம் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. பெரியவர்களும், குழந்தைகளும் தினமும் இரண்டு வேளை, காலை, மாலை என பசும் பாலை அருந்த வேண்டும். பசும்பாலில் இருக்கும் புரதம், மெக்னீசியம், கொழுப்பு, கால்சியம் போன்றவை எலும்பின் வளர்ச்சிக்கு உதவ கூடியவையாக உள்ளன. இதனால் விரைவில் மூட்டுவலி, கை, கால் வலி ஏற்படுவது தடுக்கப்படும்.

2. வாழைப்பழம்:

பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழம் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவாகும். நாளொன்றுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட போதும்! அஜீரணக் கோளாறுகள், உடல் உஷ்ணம், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. ஆப்பிள், மாதுளை, சப்போட்டா, சாத்துக்குடி போன்றவையும் இதனுடன் எடுத்துக் கொள்வது இன்னும் கூடுதல் பலன் தரும்.

3. முட்டை:

egg3ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தினமும் ஒரு முட்டையை கொடுத்து பாருங்கள்! உங்கள் குழந்தையும் மற்ற குழந்தை போல் கொழுகொழுவென மாறிவிடும். முட்டையில் இருக்கும் புரதசத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஒல்லியான தேகம் உடையவர்கள், உடல் வளர்ச்சியில் பாதிப்புகள் இருப்பவர்கள் தினமும் ஒரு முட்டையை அவித்து சாப்பிடலாம்.

4. உலர் திராட்சை:

Dry Grapes benefits in Tamilபெரும்பாலும் உலர் திராட்சையை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள். இத்தகையவர்களுக்கு முந்தைய நாள் இரவே தண்ணீரில் சிறிதளவு உலர் திராட்சைகளை ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அவர்கள் குடிக்கும் தண்ணீருடன் சேர்த்துக் கொடுத்து பாருங்கள். உலர் திராட்சையில் நிறைந்து இருக்கும் இரும்புசத்து, நார்ச்சத்து போன்றவை மலச்சிக்கலை தீர்க்கும். மலச்சிக்கல் என்கிற பிரச்சினை குழந்தைகளுக்கு இல்லாமல் இருந்தாலே! அவர்களுடைய ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். ஊறவைத்த தண்ணீருடன் திராட்சையை சேர்த்து பெரியவர்கள் சாப்பிடும் பொழுது உடலில் ரத்த விருத்தி உண்டாகி, பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள்.

5. பருப்பு வகைகள்:

toor-dalபருப்பு தானிய வகைகளில் ஏதேனும் ஒன்றையாவது ஒரு நாளில் குழந்தைகள் சாப்பிடும் உணவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் சாப்பிடும் உணவிலும் தினமும் ஒரு பருப்பு இடம் பெற்றிருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்ட நொறுக்கு தீனிகளையும் வாங்கிக் கொடுக்காமல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சிறிதளவு கொடுத்தால் கூட நீண்ட வழுவான ஆயுளைப் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.