செவ்வாய், 21 செப்டம்பர், 2021

60 வயதிலும் 20 போல இளமையாக, தோல் சுருக்கம் விழாமல் ஆரோக்கியமாக வாழ இந்த 1 டம்ளர் ஜூஸ் குடித்தாலே போதும்!

60 வயதிலும் 20 போல இளமையாக, தோல் சுருக்கம் விழாமல் ஆரோக்கியமாக வாழ இந்த 1 டம்ளர் ஜூஸ் குடித்தாலே போதும்!

நம்முடைய உடலில் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தாலே 60 வயது ஆனாலும் 20 வயது போல இளமையாக சுறுசுறுப்பாக அழகாக வாழ முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கையான வழிமுறைகளில், சுலபமாக சொல்லப்பட்டுள்ள ஒரு வழிமுறையை தான், இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் அன்றாட பயன்பாட்டில் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு பொருளை சாரு பிழிந்து குடித்து வந்தாலே போதுமே! பலவகையான நன்மைகளை நம்மால் அடையமுடியும். எல்லா இடங்களிலும், எப்போதும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய எந்த ஒரு பொருளின் மகத்துவமே நமக்கு தெரிவது கிடையாது.

cabbage

நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய, உடலை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளக் கூடிய, நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய அந்த பொருள் என்ன, அதை எப்படி தினசரி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில், அதிகமாக நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளக்கூடிய அந்தப் பொருள் முட்டைகோஸ். இந்த முட்டை தோசை சாப்பாட்டில் பொறியல் அல்லது கூட்டு செய்து சமைத்து சாப்பிடுவதை தான் நம்முடைய வழக்கத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

cabbage

ஆனால், 50 கிராம் அளவு முட்டைக்கோஸை எடுத்து பொடியாக வெட்டி மிக்சி ஜாரில் போட்டு, மிளகு 5 லிருந்து 10 மிளகு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முட்டை கோசை ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோசு சாரை சேர்த்து, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும். அவ்வளவு தான். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த முட்டைக்கோஸ் ஜூஸ் ஆக எடுத்து குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Milagu benefits in Tamil

அல்சர் என்று சொல்லப்படும் குடல்புண் விரைவாக சரியாகும். வாய்ப்புண் சரியாகிவிடும். இந்த சாரை தொடர்ந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் நீங்கும். புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மையும் இந்த முட்டைகோசு சாறுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

cabbage3

சில பேருக்கு பசி எடுக்கும் தன்மையே இருக்காது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி, செரிமானத்தை சீர்படுத்தி, பசியை தூண்டும் சக்தியும் இந்த முட்டைகோஸ் சாருக்கு உண்டு. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த முட்டைக்கோஸ் சாரை பருகலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

cabbage4

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முட்டைக்கோஸ் சாரை குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு தானாகவே வெளியேறிவிடும். இதோடு மட்டுமல்லாமல் கண் பார்வை சீராக இருக்கும். உடல் சூடு குறையும்.

face5

முட்டைகோசு சாரினை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், உடலில் நீர் சத்து சமமாகும். தோல் சுருக்கம் ஏற்படுவது குறையும். எவ்வளவு வயதானாலும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த முட்டைகோசு சாரு நமக்கு உதவியாக இருக்கும். இவ்வாறாக நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் இந்த முட்டைகோசு சாறு அடங்கியுள்ளது.

face

இந்த சாரை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் குடிக்கலாம். ஆனால், முடிந்தவரை இரவு நேரம் குடிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். பகலில் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது இந்த சாரை குடித்து வரும் பட்சத்தில் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதைத் நிச்சயம் தவிர்க்க முடியும். மருத்துவரிடம் சென்று அனாவசியமாக செலவு செய்ய தேவை இருக்காது. ட்ரை பண்ணி பாருங்க.