செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பிக்மென்டேஷன் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை வெறும் 7 நாட்களில் மிக மிக சுலபமாக நீக்கிவிட முடியும். இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!

பிக்மென்டேஷன் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை வெறும் 7 நாட்களில் மிக மிக சுலபமாக நீக்கிவிட முடியும். இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!

நிறைய பேருக்கு முகத்தில் மங்கு என்று சொல்லப்படும் கருந்திட்டுக்கள் முகத்தில் படிந்து அழகை கெடுக்கும். எப்படிப்பட்ட குறிப்புகளை முயற்சி செய்து, விலை உயர்ந்த க்ரீம்களை தடவினாலும், இதை நீக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், இயற்கையான முறையில் மிகவும் சுலபமான முறையில், நம் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து வெறும் 7 நாட்களில் இந்த கருந்திட்டுக்களை நம்மால் நீக்க முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 2 குறிப்புகளில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

face1

முதல் குறிப்பாக உங்கள் முகத்தில் இருக்கும் கருந்திட்டுகளை நீக்க, எலுமிச்சை பழ சாறு, பசும்பால் இவை இரண்டும் தேவை. முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சம் பழச்சாறு 1 ஸ்பூன் அளவு ஊற்ற வேண்டும். 2 ஸ்பூன் அளவு பசும் பாலையும் அந்த எலுமிச்சம் பழ சாறுடன் சேர்த்து கலக்க வேண்டும் எலுமிச்சை பழச்சாறுடன், பசும்பால் கலந்தவுடன் திரிந்து போகத்தான் செய்யும். பரவாயில்லை இது அப்படியே இருக்கட்டும்.

முதலில் உங்களது முகத்தை தண்ணீரால் நன்றாகக் கழுவி விட்டு, உலர்ந்த துணி கொண்டு துடைத்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் எலுமிச்சை பழ சாறு, காய்ச்சாத பசும்பால் சேர்ந்த கலவையை கருந்திட்டுக்கள் உள்ள பகுதியில் கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

milk

15 நிமிடங்கள் இதை முகத்தில் அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் கழுவி விடலாம். ஏழு நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள் குறைவதை உங்களால் உணரமுடியும். பசும் பாலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். பாக்கெட் பாலை பயன்படுத்தினால் பலன் கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது குறிப்பு, நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களில் கிடைப்பது பொடுதலை இலை. சிலர் இதை பொடுதலைக் கீரை என்றும் சொல்லுவார்கள் உங்களுக்கு இந்த இலைகள் கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, நன்றாக தண்ணீரில் அலசி கழுவி, விடுங்கள்.

poduthalai-leafe

அதன் பின்பு மிக்ஸியில் போட்டு விழுது போல் அரைத்து, இந்த விழுதுடன் 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் எந்த இடங்களில் கருந்திட்டுக்கள் இருக்கின்றதோ அந்த இடத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவி அப்படியே 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு, கழுவி விடவேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முகத்தில் இருக்கும் கருத்திட்டு இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடும் ட்ரை பண்ணி பாருங்க.