செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அடடா! இது தெரியாம இத்தனை நாட்களாக பூண்டு தோலை வீணாக குப்பை தொட்டியில் போட்டு விட்டோமே! குப்பையில் போடும் இந்தப் பொருளுக்கு இத்தனை மகத்துவமா?

அடடா! இது தெரியாம இத்தனை நாட்களாக பூண்டு தோலை வீணாக குப்பை தொட்டியில் போட்டு விட்டோமே! குப்பையில் போடும் இந்தப் பொருளுக்கு இத்தனை மகத்துவமா?

ஆமாங்க! குப்பையில் தூக்கி போடுகிற பூண்டு தோலுக்கு இத்தனை மகத்துவமா! என்ற அளவிற்கு ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூண்டு தோலை பற்றிய இந்த வியக்கத்தக்க அரிய தகவலை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, பூண்டு பற்றிய சில அடிப்படையான தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. பூண்டில் ஒரு பல் பூண்டு, தரை பூண்டு, சைனா பூண்டு, மலை பூண்டு, நாட்டுப் பூண்டு என்ற வகைகள் உண்டு.

இந்த வகைகளில், மலைப் பகுதிகளில் விளையக் கூடிய ஒற்றைப் பல் பூண்டுக்கு (ஒரு பல் பூண்டு) அதிகப்படியான சத்துக்கள் உண்டு. உங்களுடைய வீட்டில் அதிகப்படியாக இந்த ஒற்றைப் பல் பூண்டை சமையலில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பூண்டை தொடர்ந்து நம்முடைய உணவில் அதிகப்படியாக சேர்த்து வந்தால், நம்முடைய உடலில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. சளி இருமல் நீங்க, புற்றுநோய் வராமல் தடுக்க, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் பொருட்களின் வரிசையில் இந்த பூண்டிற்கு முதல் இடம் என்று சொன்னால் அது மிகையாகாது.

poondu1

சரி, பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் இருக்கக்கூடிய நன்மைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பூண்டு தோலில் என்ன தான் ரகசியம் மறைந்துள்ளது? உங்களுடைய வீட்டில் நீங்கள் எந்த பூண்டை பயன்படுத்தினாலும் சரி, அந்த தோலை உரித்து இனி குப்பை தொட்டியில் போடக்கூடாது. ஒரு அகலமான பாத்திரத்தில், பூண்டு தோலை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்து வாருங்கள்.

பூண்டு தோலை சேகரிக்கும்போது, பூண்டு தோலில் கட்டாயமாக ஈரப்பதம் இருக்கும். தோலை சேகரித்து வைக்கும் பாத்திரத்தை, மூடி வைத்து விடக்கூடாது. அப்படியே அது காற்றோட்டமாக 2 நாட்கள் ஆற வேண்டும். பூண்டு தோளில் இருக்கக்கூடிய ஈரத் தன்மை நீங்கி விட வேண்டும். அதன் பின்பாக நீங்கள் சேகரித்த பூண்டு தோலை எல்லாம் ஒரு துணிப்பையில் போட்டு மூட்டையாக, தலையணை போல் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

poondu2

அதாவது இப்போதெல்லாம் கேரிபேகுக்கு பதிலாக துணிப்பைகளை கடைகளிலிருந்து கொடுக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும், கொஞ்சம் மெல்லியதாக இருக்கக் கூடிய துணி பைல்களையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதோ ஒரு துணிப்பையில் பூண்டு தோலை போட்டு, முடிச்சுப்போட்டு தலையணை போல செய்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.

bag

இந்த பூண்டு தோல் தலையணையை தினம் தோறும் நாம் தலைக்கு வைத்து தூங்கினால், இதன் மூலம் நமக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ நன்மைகள் ஏராளம். இந்த பூண்டு தோல் நிரப்பப்பட்ட பையை தலையணைக்கு மேல் வைத்து, உறங்கினால் நமக்கு வரக்கூடிய தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும். டென்ஷன் தலைவலி கூட போய்விடும் என்றால் பாருங்களேன்!

pillow

நம்ப மாட்டீங்க, உங்ககிட்ட கொஞ்சமாக பூண்டு தோல் இருந்தாலும் சரி, அதை சிறிய துணி பையில் போட்டு கட்டி தலைக்கு அடியில் வைத்து உறங்கி பாருங்கள். பிறகு உரிக்கிற பூண்டு தோல் எல்லாம் சேகரித்து சேகரித்து, அந்த பையிலேயே போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கே புரியும்.

verum-tharai-sleep

நிச்சயமாக காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது, சாதாரணமாக தூங்கி கண்விழிப்பதற்கும், பூண்டு தலையில் தூங்கி விழிப்பதற்க்கும் நிச்சயமாக வித்தியாசத்தை உணர முடியும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இயற்கையான முறையில் நம்மை ஃபிரஷ்ஷாக வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல டிப்ஸ். ட்ரை பண்ணி பாருங்க!