Advertisement

வாரத்தில் 2 நாட்கள் இந்த எண்ணெய் தேய்த்து குளித்தால் போதும். ஒரு முடிகூட உதிராது. 30 நாட்களில் முடி கிடுகிடுவென வளரத் தொடங்கிவிடும்

வாரத்தில் 2 நாட்கள் இந்த எண்ணெய் தேய்த்து குளித்தால் போதும். ஒரு முடிகூட உதிராது. 30 நாட்களில் முடி கிடுகிடுவென வளரத் தொடங்கிவிடும்

நம்மில் நிறைய பேருக்கு முடி உதிர்வு பிரச்சனை ஒரு பெரும் பாரமாக இருந்து வருகிறது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தலையில் இருக்கும் முடியை கருகருவென, அடர்த்தியாக வைத்திருந்தால் தான், ஒரு அழகு. தலையில் சொட்டை தெரிவது, முடி கருப்பாக இல்லாமல் இருப்பது, அடர்த்தியாக இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சினைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வை காண, ஒரு சுலபமான எண்ணெயை தான் நம்முடைய வீட்டில், நம் கையாலேயே தயாரிக்க போகின்றோம்.

hair-massage

சுலபமாக தயாரிக்கப் போகும் இந்த தலை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் எண்ணெக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் – 250ml, விளக்கெண்ணை – 150ml, வெந்தயம் 5 – ஸ்பூன், கருஞ்சீரகம் – 5 ஸ்பூன், பூண்டு – 15 பல் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் தயாராக இருக்கும் தேங்காய் எண்ணெயையும், விளக்கெண்ணெயையும் ஒன்றாக ஊற்றி நன்றாக சூடு படுத்தி விடுங்கள். எண்ணெய் தளதளவென கொதித்து தூவங்க ஆரம்பிக்கும் போது, வெந்தயம், கருஞ்சீரகம், பூண்டு இந்த 3 பொருட்களையும் ஒவ்வொன்றாக அந்த எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

karunjeeragam

எண்ணெய் கொஞ்சம் பொங்கி வர ஆரம்பிக்கும். கொஞ்சம் பெரிய கடையாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால், கையில் கரண்டியை வைத்து எண்ணெயை கிளறிக் கொண்டே இருங்க. எண்ணெயை கிளறாமல் விட்டு விட்டால், பொங்கி கீழே எல்லாம் ஊற்றி வீணாகிவிடும். நாம் இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, ஒன்றும் இரண்டுமாக கூட பொடி செய்து எண்ணெயில் போட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான்.

ஆனால், வெந்தயம் கருஞ்சீரகம் பூண்டின் சத்து அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கி இருக்க வேண்டும். அடுப்பில் இருக்கும் எண்ணெய் 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பிலிருந்து அந்த எண்ணெயை இறக்கி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். 2 மணி நேரம் கழித்து ஒரு வெள்ளைத்துணியிலோ அல்லது ஒரு வடிகட்டியின் மூலமாகவோ எண்ணெயை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

vendhaya-oil

வாரத்திற்கு 2 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி மசாஜ் செய்து 2 மணிநேரம் ஊற வைத்து அதன் பின் ஷாம்பு போட்டு குளித்து விட்டால் போதும். உங்களது தலைமுடி உதிர்வு சட்டென குறைய ஆரம்பிக்கும். எண்ணெயில் நாம் சேர்த்திருக்கும் பூண்டும் முடிஉதிர்வை சட்டென குறைக்கும். பூண்டை தவிர்த்து விடாதீர்கள். முடி உதிர்வுக்கு பூண்டு நல்ல தீர்வு தரும்.

இதோடு சேர்த்து வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்த இந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

hair

முடிந்த வரை இந்த எண்ணெயை உங்களது தலையில் தேய்க்கும் போது, அந்த சமயம் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடுபடுத்தி விட்டு, அந்த வெதுவெதுப்பாக இருக்கும்போது அந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, முடி உதிர்வு அதிவிரைவாக குரைக்கப்படும் என்பதும் உண்மையான ஒரு விஷயம் தான். உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்த எண்ணெயை கொஞ்சமாக வெதுவெதுப்பாக சூடுபடுத்தி தலையில் தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம்.