Advertisement

உங்கள் கூந்தல் இந்த 4 இல் எந்த வகையென்று முதலில் தெரிந்து கொண்டு பின்னர் பராமரிப்பு செய்தால் வேகமாக வளரும்.

உங்கள் கூந்தல் இந்த 4 இல் எந்த வகையென்று முதலில் தெரிந்து கொண்டு பின்னர் பராமரிப்பு செய்தால் வேகமாக வளரும்.

எல்லோருக்கும் ஒரே வகையான தன்மையுடைய கூந்தல் இருப்பதில்லை. அதில் குறிப்பாக பெண்களின் கூந்தல் பொதுவாக 4 வகை படுகிறது. ஒருவருக்கு சாதாரண கூந்தல் முடி இருந்தால் அதே போல் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு எண்ணெய் பசையுள்ள கூந்தல் இருக்கும், சிலருக்கு வறண்ட கூந்தல் இருக்கும், இன்னும் சிலருக்கு பலவீனமான கூந்தல் இருக்கும். இந்த 4 வகையில் உங்களுடைய கூந்தல் வகை எது? என்பதை நீங்கள் முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி கூந்தலை பராமரித்து வந்தால் நிச்சயம் உங்களுடைய தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். நான்கு வகை கூந்தலையும் தனித்தனியாக எப்படி கவனிப்பது? என்பதை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

hair-2

1. சாதாரண கூந்தல்:

இந்த வகையான கூந்தல் உடையவர்கள் எண்ணை பிசுபிசுப்பும் இல்லாமல், வறண்டும் இல்லாமல் தூய்மையுடனும், பளபளப்பாகவும் வைத்திருப்பார்கள். இவர்களுக்கு பெரிதாக பராமரிப்பு தேவைப்படுவதில்லை. அதற்காக எப்படியும் போகட்டும் என்றும் விட்டு விடாதீர்கள். அழுக்கு சேராமல் தலையை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.

2. எண்ணெய் பசையுள்ள கூந்தல்:

இந்த வகையான கூந்தலுக்கு அதிகப் பராமரிப்பு தேவைப்படும். சுலபமாக மாசு, தூசிகளும் உங்கள் தலைமுடியில் படிந்துவிடும். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கூந்தலை பறக்க விடாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. இல்லை என்றால் விரைவாகவே கூந்தல் உடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எண்ணெய் பசையுள்ள கூந்தல் உடையவர்கள் எலுமிச்சை, மருதாணி, சீயக்காய் கலந்துள்ள ஷாம்பூ வகைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் மாதம் ஒருமுறை மருதாணியை தலையில் பேக் போல போட்டு அலசுவது நல்ல பலன் தரும்.

shikakai

எண்ணெய் தன்மை உள்ள கூந்தல் உடையவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும். அடிக்கடி கூந்தலை வாரிக் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்து நீங்கள் தலைக்கு குளித்து முடித்த பின் கடைசியாக ஒரு முறை அலசி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டு வந்தால் நல்ல பலன் தரும். இயற்கையாக சீயக்காய், திரிபலா, புங்கங்காய் இந்த மூன்றையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இடித்து மாவாக்கி ஷாம்பு போல் குழைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

3. வறண்ட கூந்தல்:

வறண்ட கூந்தல் உடையவர்கள் தலைமுடியின் நுனிப்பகுதியில் இரண்டிரண்டாக பிளவுபட்டு இருக்கும். மேலும் கூந்தலின் நிறமும் கருமையாக இருப்பதில்லை. இவர்கள் அதிக கவனத்துடன் கூந்தலை பராமரிப்பது மிகவும் நல்லது. அடிக்கடி எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் மண்டையோட்டு பகுதிக்கு ரத்த ஓட்டம் கிடைத்து கூந்தல் வளர்ச்சி சிறப்பாக அமையும். உடல் உஷ்ணமும் குறைந்து வறண்டு போவது தடுக்கப்படும். நீங்கள் முட்டை அல்லது நெல்லிக்காய் சேர்க்கப்பட்டுள்ள ஷாம்பூ வகைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது பலன் தரும்.

egg-amla

வறண்ட கூந்தல் உடையவர்கள் ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், செம்பருத்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைகளை பயன்படுத்தி மசாஜ் செய்து வரலாம். வறண்ட கூந்தல் உடையவர்கள் முட்டை பேக் போட்டு சீயக்காய் பயன்படுத்தி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். தலைக்கு அலசிய பின் கடைசியாக கருப்பு வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் அலசி விட்டு வருவது பலன் தரும். நீங்கள் மாதம் ஒரு முறை தலையில் நல்லெண்ணெய் தேய்த்து ஊற விட்டு சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காய் கலந்து கூந்தலை அலசி வருவது கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

4. பலவீனமான கூந்தல்:

பலவீனமான கூந்தல் உடையவர்கள் உடைய கூந்தலை பார்க்கும் பொழுது உயிரற்று காணப்படும். அதிகம் வெளியில் மாசு தூசுகளில் சுற்றுவது, சரியான நேரத்திற்கு சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் நீர் உப்பு நீராக இருப்பது போன்ற காரணங்களினால் உங்களுடைய கூந்தல் பலவீனமடைகிறது. இத்தகைய கூந்தல் உடையவர்கள் வேர்ப்பகுதியை பலமாக வைத்திருப்பது அவசியம். வாரம் ஒரு முறை கறிவேப்பிலை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். கறிவேப்பிலையை உணவில் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.

men-hair

அதிகம் பலவீனம் உள்ள கூந்தல் உடையவர்கள் வைட்டமின் ஈ மாத்திரைகளை மற்றும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி உணவில் அரைக்கீரை, முளைகட்டிய கொண்டைக்கடலை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மருதாணியையும், கருவேப்பிலையும் அரைத்து சம அளவு சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தடவி வந்தால் முடி கருகருவென்று பளபளப்பாக வளரும்.

hair-fall1

சின்ன வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து சோற்றுக் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை கலந்து அவற்றுடன் இஞ்சி சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தலைமுடிக்கு பேக் போல் போட்டு அலசினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். நெல்லிக்காயை பாலில் அரைத்து பின்னர் பிழிந்து சாறெடுத்து எண்ணையில் கலந்து தடவி வர வேர்க்கால்கள் ஆரோக்கியம் பெறும்.