50 வயதானாலும் உங்கள் முகத்தில் சுருக்கமே விழாது. எப்போதுமே இளமையா இருக்க ஆசபட்றவங்க மட்டும், இத தெரிஞ்சிக்கிட்டா போதும். சூப்பர் நேச்சுரல் ஃபேஸ் பேக் உங்களுக்காக!
என்றும் 20! நமக்கு எத்தனை வயதானாலும் நம் முகத்தில் இருக்கக்கூடிய இளமையான தோற்றம் மாறக் கூடாது என்று தான் நினைப்போம் அல்லவா? இருப்பினும், காலத்தின் கட்டாயம். இயற்கையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தள்ளிப்போட முடியும். 50 வயதிலும் 20 வயது போன்ற முக அழகை பெற, முகச்சுருக்கத்தை தள்ளிப்போட, நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் செலவு குறைவான ஃபேஸ் பேக்கை எப்படி செய்து கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த ஃபேஸ் பேகிற்க்கு கிரீன் டீ தூள், தயிர், முல்தானி மெட்டி, தேன் இந்த பொருட்கள் மட்டும் போதும். ஒரு சிறிய பவுலில் 1 பேக் அளவு கிரீன் டீ தூளை போட்டுக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் சுத்தமான தேனையும் சேர்த்துக் கொண்டு, நன்றாக பேஸ்ட் போல் கலக்கி, முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை உலரவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டால் போதும்.
ஆயில் ஸ்கின் இருக்கிறவங்க 2 பேக் க்ரீன் டீ தூள் போட்டு, இந்த ஃபேஸ் பேக்கை யூஸ் பண்ணிக்கலாம். கொஞ்சம் டிரை ஸ்கின் உள்ளவர்கள், 1 பேக் கிரீன் டீ போட்டு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி போட்டும் ஃபேஸ் பேக் தயாரித்து, யூஸ் பண்ணிக்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு நாள் போட்டால் கூட போதும். உங்களது இளமை நிரந்தரமாக இருக்கும். முகச்சுருக்கம் சீக்கிரம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. (உங்களுக்கு புரிந்தது அல்லவா? ஆயில் ஸ்கின் இருக்கிறவங்க, முல்தானி மெட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டாம் அவ்வளவு தான்.)
மேல் சொன்ன பொருட்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வெறும் கடலைமாவுடன் தயிர் சேர்த்து அந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து அதன் பின்பு கழுவி விட்டால் கூட முகசுருக்கம் சீக்கிரத்தில் வராது.
இந்த குறிப்போடு சேர்த்து உங்களது உடல் ஆரோக்கியத்தையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். பழ வகைகள், கீரை வகைகள் இப்படியாக உடல் ஆரோக்கியத்தையும், சத்துக்களையும் அதிகமாக கொடுக்கக் கூடிய சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் அழகிற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். அழகு என்பது அடுத்தவர்கள் நம்மை பார்ப்பதற்காக மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, தன்னம்பிக்கையை அதிகரித்து, நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்றாலும், அந்த முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக இருப்பதில் அழகிற்கும் ஒரு இடம் உள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவு கூர்ந்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.