உங்கள் அழகைக் குறைக்கும் மருவை, ஒரே நாளில் உதிர வைக்க சூப்பர் ரெமிடி உங்களுக்காக! அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே!
சில பேருக்கு முகத்தில் வெளியில் தெரிகின்ற அளவிற்கு, சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மரு இருக்கும். அந்த மரு அவர்களது அழகை குறைத்து காட்டும். என்ன செய்தாலும் அது போகவே போகாது. அப்படி அந்த மரு உதிர்ந்தாலும், அந்த இடத்தில் தழும்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தழும்பு இல்லாமல், இருந்த தடமே தெரியாமல் அதை நீக்குவதற்கு இயற்கையான வைத்திய முறைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருநாள் இரவு போதுங்க! மரு தானாகவே உதிர்ந்துவிடும். அது என்ன ரிமெடி நீங்களும் தெரிஞ்சுக்க ஆசப்படுறீங்களா? வாங்க பார்க்கலாம்.
முதலில், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பூண்டை எடுத்துக்கொள்ளுங்கள். 6 இலிருந்து 7 பல் பூண்டை தோல் உரித்து விட வேண்டும். அதன் பின்பு சிறிய உரலில் போட்டு, அதை நன்றாக நசுக்கி விடுங்கள். அதில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு ஜூஸ் நமக்கு கிடைக்கவேண்டும். மிக்ஸியில் போட்டு எல்லாம் அரைக்கக் கூடாது. தண்ணீர் ஊற்றி எல்லாம் சாரி எடுக்கக்கூடாது. உங்கள் கையாலேயே நசுக்கி வடிகட்டி பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு ஜூஸ் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (வெறும் பூண்டில் இருந்து பிரிந்து பூண்டு சாறு.)
பூண்டு சாறு 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 1 ஸ்பூன், இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். ரொம்பவும் பேஸ்ட் போல் இது இருக்கக் கூடாது. ஜெல் போல கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சு அல்லது பட்ஸ்ஸிலோ தொட்டு எங்கு மரு இருக்கின்றதோ அந்த மரு மேலேயும், அந்த மருவை சுற்றியும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக சாதாரண பேண்டைட் விற்கும் அல்லவா? காயத்திற்கு ஓட்டுவோமே! அந்த பேண்டேட் எடுத்து, அந்த மாரேவின் மேல் ஒட்டி விடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அதை அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை அந்த பேண்டேடை, நீங்கள் எடுக்கும் பொழுது நிச்சயம் உங்கள் மரு தானாக விழுந்து விடும். அப்படி விழவில்லை என்றால், தொடர்ந்து மூன்று நாட்கள் இதேபோல் முயற்சி செய்து பாருங்கள். தழும்பு கூட இல்லாமல், மரு உதிர்ந்து விடும் என்பதில் சந்தேகமே கிடையாது.
நேரடியாக உங்களுக்கு முகத்தில் இருக்கும் மருவின் மீது அப்ளை செய்வதற்கு பயமாக இருந்தால், உடலில் வேறு எங்காவது மரு இருந்தால், அந்த இடத்தில் முதலில் பொட்டு சோதித்து பார்த்து விட்டு, உங்களுக்கு பக்க விளைவுகள் இல்லை என்ற திருப்தி வந்தவுடன், முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.
உஷாராக இருப்பது தவறு ஒன்றும் கிடையாது. யார் எதை சொன்னாலும், எதில் படித்தாலும் அதை முகத்தில் அப்ளை செய்து பார்ப்பதற்கு முன், உங்களுக்கு ஒத்து வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாமா?