Advertisement

நாம் எல்லோருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய, நாட்டுமருந்து கை வைத்தியம்! அற்புதமான இந்த இயற்கை மருத்துவத்தையெல்லாம் நாம் எப்படி மறந்தோம்?

நாம் எல்லோருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய, நாட்டுமருந்து கை வைத்தியம்! அற்புதமான இந்த இயற்கை மருத்துவத்தையெல்லாம் நாம் எப்படி மறந்தோம்?

தலைவலி, கை கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக் கூடிய உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தலைவலி வந்தால் உடனே தலைவலி மாத்திரையை அடிக்கடி போடும் பழக்கத்தை இன்றிலிருந்து விட்டுவிடுங்கள். நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.

தலைவலியில் இன்னொரு விதம் உள்ளது. தலையில் நீர் கோர்த்து புருவத்தின் கீழே வலிக்க ஆரம்பிக்கும். தலைபாரம் என்று சொல்லுவார்கள் அல்லவா? இந்த தலைவலிக்கு சுக்கு, பெருங்காயம் இந்த இரண்டையும் மஞ்சள் இழைக்கும் கல்லால் இழைத்து, அந்த விழுதை எடுத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் தலையில் இருக்கும் நீர் அனைத்துமே காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

sukku

1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சுக்கு விழுதுக்கு, 2 சிட்டிகை பெருங்காயத்தூள் போதும். (மஞ்சள் இழைக்கும் கல், அல்லது சொரசொரப்பான தரை, இதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சுக்கை நன்றாக தேய்க்க வேண்டும். சுக்கு தேய்ந்து கொஞ்சம் விழுது கிடைக்கும். அதில் பெருங்காயத் தூளை கலந்து, தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான்.)

இன்றைக்கு, குழந்தைகளுக்கு நெஞ்சு சளி, இல்லாமல் இருப்பதே கிடையாது. இந்த நெஞ்சு சளியை போக்குவதற்கு பாட்டில் பாட்டிலாக மருந்தை ஊற்றுகின்றோம். தூதுவளைக் கீரை என்று ஒன்று இருக்கின்றது. இந்த தூதுவளைக் கீரையை வாங்கி சாறு பிழிந்து 1/2 சங்கடை அளவு கொடுத்தால் கூட, நெஞ்சு சளி காணாமல் போய்விடும் என்பது இன்று பல பேருக்கு தெரிவதில்லை.

thuthuvalai

சளி பிடிப்பதில் இன்னொரு விதம், தொண்டை சளி! தொண்டையில் கரகரப்பு இருந்து, சளி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். தொண்டை சளியை  போக்க ஒரு சங்கடை கண்டங்கத்தரி வேர் சாறு போதும். கண்டங்கத்திரி வேர், நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை இரண்டு சங்கடை அளவு கொடுக்க வேண்டும்.

kandang-kathiri

காய்ச்சல் என்றதுமே இந்த சூழ்நிலையில் எல்லோருக்கும் பயம் வரும். எப்படிப்பட்ட காய்ச்சலையும் போக்கக்கூடிய சக்தி பப்பாளி இலை சாருக்கு உள்ளது. பப்பாளி இலையை எடுத்து, நன்றாக அரைத்து, பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு, 1/4 கப் அளவு குடித்து விட்டாலே போதும். எப்பேர்ப்பட்ட கொடிய காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

vilvam

அப்படி இல்லை என்றால் 11 மிளகு, 3 வில்வ இலைகள், இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மென்னு முழுங்கி தண்ணீரை குடித்து விட்டால், காய்ச்சலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Milagu benefits in Tamil

பெரியவர்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் வயிற்றில் பூச்சி இருந்தால், அது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய கேடு என்று சொல்லுவார்கள். சிலசமயம் அந்த குடல் புழுக்கள் உயிரோடு மலத்தில் வெளியேறுவதை நாம் பார்த்திருப்போம். அந்த குடல்புழு வயிற்றிலிருந்து சுத்தமாக வெளியேற விளக்கெண்ணெய், வேப்பங்கொழுந்து இந்த இரண்டு பொருள் மட்டுமே போதும். வேப்ப இலையை நன்றாக அரைத்து, சாறு எடுத்து, விளக்கெண்ணெய் சேர்த்து அப்படியே சாப்பிட்டு விடவேண்டும். உங்களுடைய வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் செத்துப்போய் மலம் வழியாக வெளியேறிவிடும்.

vepilai

இந்த குறிப்புகள் அனைத்துமே நம்முடைய முன்னோர்கள் கை வைத்தியமாக பயன்படுத்தி வந்ததுதான். காலப்போக்கில் ஏனோ நாம் இவை அனைத்தையும் மறந்து விட்டோம். மேலே சொன்ன கைவைத்தியத்துக்கு பயன்படுத்தும் எல்லா பொருட்களும் இன்றும் நாட்டு மருந்து கடைகளின் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.