பொடுகுத் தொல்லை நீங்க வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பு போதும்! வேற ஒண்ணுமே வேணாம் தெரியுமா?
பேன் மற்றும் பொடுகு தொல்லையால் அவதிப்படும் பெண்களும், ஆண்களும் ரொம்ப ரொம்ப சுலபமா உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இதற்காக பெருமளவு செலவு செய்ய தேவையில்லை. பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி தலையை சொறிந்து கொண்டே இருப்பார்கள். இதனை பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்கும் படியாக இருக்கும். பொடுகு பிரச்சனை மட்டும் இருந்தால், முக சருமம் பொழிவிழக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. இத்தகைய பொடுகு பிரச்சனையை தீர்க்க சுலபமான வழி தான் என்ன? அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
பொடுகு பிரச்சனை முடி உதிர்வை தீவிரப்படுத்தும். பொடுகு என்பது தலையில் மண்டை ஓட்டுப் பகுதியில் வெள்ளை வெள்ளையாக ஒட்டிக் கொண்டிருக்கும் திட்டுக்கள் தான் பொடுகு என்று கூறுகிறோம். பலருக்கும் பொடுகு என்றால் இது தான் என்பது கூட தெரிவதில்லை. பொடுகு இருப்பவர்கள் தலையை சொரிந்து விட்டு அந்த கைகளை முகத்திற்கு கொண்டு சென்றால் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி தலை முடியையும், முக அழகையும் கெடுக்கும் பொடுகு பிரச்சனையை வீட்டில் நாம் பயன்படுத்தும் உளுத்தம்பருப்பை வைத்தே ஒரே மாதத்தில் சரி செய்து விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.
நம் தலையில் இருக்கும் செல்கள் இறந்து உதிர்ந்து போவதைத் தான் பொடுகு என்கிறோம். இவை பொதுவாக அனைவருக்குமே நடக்கும் நிகழ்வு தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு சிலருக்கு அவை அதிகமாக நடக்கும் பொழுது பிரச்சனையாக மாறுகிறது. தொடர்ந்து சொரிந்து கொண்டே இருந்தால் தலையில் எரிச்சலும், தோல் சிவந்து போகவும் செய்யும். எப்போதும் தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்ல பலன் தரும்.
இதற்கு தீர்வாக வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பை சிறிதளவு எடுத்துக் கொண்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேக வைத்த உளுத்தம் பருப்பை பசையாக செய்து கொள்ளுங்கள். இந்த பசையை தலை முழுவதும் வேர் கால்களில் படும்படியாக தடவி விட்டு பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே உலர விடவும். உளுத்தம் பருப்பு உலர்ந்ததும் தலையை அலசி விட்டால் போதும். தலையில் இருக்கும் பொடுகு, பேன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கி விடும்.
பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி செயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையாக கிடைக்கும் சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசினால் பொடுகு பிரச்சினையிலிருந்து விடுபடலாம். அடிக்கடி ஷாம்பூ அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு பொடுகு பிரச்சனை அதிகமாகும் என்பதை நினைவில் வையுங்கள். எப்பொழுதும் ஷாம்புவை நேரடியாக தலைக்கு தேய்க்கக் கூடாது. சிறிதளவு தண்ணீரில் கலந்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் ஒரு சிலரின் கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடியவை.
மேற்கூறிய இந்த வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு மாதத்தில் பொடுகுத் தொல்லை முற்றிலுமாக நீங்கி விட்டிருக்கும். இதனை வாரம் ஒருமுறை என்று நான்கு முறை பயன்படுத்தினால் போதும். மிக மிக சுலபமான முறையில் பொடுகை நாம் விரட்டி அடித்து விடலாம். உளுத்தம் பருப்பில் இருக்கும் பசை போன்ற தன்மை கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராகவும் அமைந்து விடும். இதனால் கூந்தல் பட்டுப் போல் பளபளவென மின்னும் துவங்கும்.