Advertisement

எப்போது தலையில் வழுக்கை விழுமோ, என்ற அளவிற்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? கண்ண மூடிட்டு இத மட்டும் குடிச்சிடுங்க! 10 நாட்கள் கழித்து, உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது.

எப்போது தலையில் வழுக்கை விழுமோ, என்ற அளவிற்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? கண்ண மூடிட்டு இத மட்டும் குடிச்சிடுங்க! 10 நாட்கள் கழித்து, உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது.

சில பேருக்கு தலை முடிஉதிர்வை என்னதான் செய்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது. பல வகையான எண்ணெய்கள், பல வகையான மூலிகைகள், செம்பருத்திப் பூ, இலை, இப்படி எப்பேர்ப்பட்ட பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்தினாலும், ஒரு பிரயோஜனமும் இருக்காது. தலைமுடி உதிர்ந்து கொண்டே இருக்கும். எப்போது வழுக்கையாகி விடுமோ என்ற பயம் நமக்கு வந்து விடும். அந்த அளவிற்கு பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்கு நிரந்தர தீர்வு காண ஒரு வழி உள்ளது. முற்றிலும் இயற்கையான வழிமுறை தான் இது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. அது என்ன வழி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Thalai Mudi

முதலில் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம், நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். இந்த இரும்புச்சத்தை அதிகரிக்கும் சக்தி கருவேப்பிலைக்கு உள்ளது. சில பேருக்கெல்லாம் கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் சீரான முறையில், கட்டுப்படுத்தப்படும்.

ஆனால், உடலில் இரும்புச்சத்து அதிகம் குறைவாக உள்ளவர்களுக்கு, மேலே கொடுக்கப்படும் எண்ணெயாக இருந்தாலும், அல்லது வேறு எந்த மூலிகை எண்ணெயாக இருந்தாலும், இயற்கையான ஷாம்பு பயன்படுத்தினாலும், அது பலனளிக்காது. உங்களுக்கு வேறு வழியே கிடையாது. இதை சாப்பிட்டே ஆகவேண்டும்.

karuvepilai

நீங்கள் தினந்தோறும் பிரஷ்ஷாக இருக்கும் இரண்டு கருவேப்பிலை கொத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை கறிவேப்பிலையை நன்றாக கழுவி விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அந்த கறிவேப்பிலையோடு, 1/2 ஸ்பூன் சீரகம், நான்கு மிளகு, 1 பின்ச் இஞ்சி துண்டு, 1 டேபிள்ஸ்பூன் புளிக்காத தயிர், ஒரு சிட்டிகை உப்பு இவைகளை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதை ஒரு டம்ளரில் மாற்றி, முடிந்தவரை கொஞ்சம் நீர்ம தன்மையாக மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது 300ml வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, ஒரு பெரிய டம்ளர் முழுவதும் குடித்து விட்டாலே போதும். எதற்காக தண்ணீர் கலக்க வேண்டும் என்றால், கருவேப்பிலையின் துவர்ப்பு சுவை துவர்ப்பாக இருக்கும் அல்லவா. முடிந்தவரை தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால், அந்த ஜூஸை குடிக்க உங்களுக்கு கஷ்ட்டமாக இருக்காது என்பதற்காக தான்.

long-hair

இந்த கருவேப்பிலை ஜுஸ் முடி உதிர்வை கட்டுப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய உடம்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்யும். உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண் பார்வையை சீராக வைத்திருக்கும்.

hair

உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க பட்டு, ரத்தம் சீராக சுரக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கூடிய சக்தியும் இந்த கருவேப்பிலைக்கு அதிகமாகவே உண்டு. இயற்கையான முறையில் உங்களுடைய முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் நிரந்தரமான ஒரே வழி இதுதான்.

curry-leaves2

இந்த ஜூஸை காலை அல்லது மாலை இந்த இரண்டு வேலைகளை எப்போது வேண்டுமென்றாலும் குடிக்கலாம். முதலில் தொடர்ந்து 10 நாட்கள் குடிக்கும் போது உங்களுக்கு முடி வளர்ச்சியில், முடி உதிர்வு கட்டுப்படுத்துவதில் நல்ல வித்தியாசம் தெரியும். அதன் பின்பாக தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஜூஸை எடுப்பதில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

karuvepilai-podi

ஆனால் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என்று ஜூஸ் குடித்தால் உடனடி ரிசல்ட் தெரியாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், குறைந்தது மூன்று மாதங்களாவது தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். உங்களால் கருவேப்பிலையை ஜூஸாக குடிக்க முடியவில்லை என்றாலும், கருவேப்பிலை பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் சாப்பாட்டில் போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொண்டாலும் முடி உதிர்வது கட்டுப்படும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.