Advertisement

அழுதால் நல்லதா? கெட்டதா? அழுகையை பற்றி ஆன்மீகமும், அறிவியலும் கூறும் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

அழுதால் நல்லதா? கெட்டதா? அழுகையை பற்றி ஆன்மீகமும், அறிவியலும் கூறும் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

பெண்களையும் அழுகையையும் பிரிக்கவே முடியாது என கூறலாம். அதிக அளவு சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி உடனே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிடும். இது கடவுளால் படைக்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம். இது பெண்ணுக்கு மட்டுமே உரிய விஷயம் இல்லை என்றாலும், 90% பெண்களுக்கு மட்டுமே உடனடியாக அழுகை உண்டாகிறது. சரி, அழுவது சரியா? தவறா? நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி ஆன்மீகமும், அறிவியல் என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

sad

சிறு சிறு விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் ஆண்கள்! அதேபோல் சிறு சிறு விஷயங்களுக்கும் உடைந்து போய் அழுது விடுபவர்கள் பெண்கள்! இந்த இரண்டில் எது சரி? என்று கேட்டால் பாதிக்கு பாதி பதில் வரும். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் நீங்களே உங்கள் தலையில் கொட்டிக் கொள்ள வேண்டி வரும். என்ன? ஆமாம் தானே?

இந்த பொண்ணுகளே இப்படி தான்பா.. சரியான அழுமூஞ்சி. இவங்க எதற்கெடுத்தாலும் அழுக்காச்சி படம் போட்டுக் காட்ட வேண்டியது! என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அதிக ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அழுகை நல்லது என்கிற அறிவியல் உண்மையை தெரிந்து கொண்டால் வியந்து போவீர்கள். அது எப்படி அழுதால் நல்லதுனு சொல்வீர்கள்? என்று கேட்பது புரிகிறது.

sad-crying

ஆன்மீகத்தை பொறுத்தவரை அழுகை என்பது பெரிதாக வாதத்திற்கு உரியது அல்ல. 6 மணிக்கு மேல் அழுதால் மகாலட்சுமி வரமாட்டாள். அழுகை சத்தம் கேட்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். அதனால் அந்த வீட்டில் பணவரவு தடைபடும் என்பார்கள். தாங்க முடியாத ஏமாற்றத்தினால் ஒருவர் வயிறு எறிந்து அழுது சாபமிட நேர்ந்தால், அந்த சாபம் நிச்சயம் பலிக்கும் என்பார்கள் அதை தவிர ஆன்மீக காரணங்கள் பெரிதாக ஒன்றுமில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக அதிர்ச்சியூட்டும் தகவலாக அழுகை நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அழுகை ஏன் நல்லது? அழுகையில் மூன்று வகைகள் முதலில் உள்ளன. அதில் முதலாவதாக ஏதோ ஒரு பயத்தினாலும், நம்மால் முடியவில்லையே என்கிற ஏக்கத்தினாலும் அழுகை வந்துவிடுகிறது. இது இயலாமையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

sad-crying1

இரண்டாவதாக மற்றவர்களிடத்தில் ஒரு காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக அழுவது. இந்த அழுகை கூடவே கூடாது. மற்றவர்களை காயப்படுத்தி ஒரு விஷயம் நமக்கு வேண்டுமென்றால் அது சுயநலம் ஆகிவிடும். அதனால் இந்த அழுகை மட்டும் வேண்டாம்.

மூன்றாவதாக குற்ற உணர்ச்சியினால் மனதைத் திடப்படுத்த முடியாமல் வெளியேறும் அழுகை. இது பலருக்கும் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே பெரும்பாலும் வரும். ஆக அழுகையில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த வகை என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

sad-crying2

நாம் அழும் போது வெளியேறுகின்ற கண்ணீர், கண்ணீராக மட்டுமில்லாமல் கண்களில் இருக்கும் பாக்டீரியாக்களையும் சேர்த்து வெளியே தள்ளி விடுகிறது. கண்களில் தூசு விழுந்தால் உடனே கண்ணீர் வந்து விடுகிறது, அதனுடன் சேர்த்து தூசும் வந்து விடுகிறது அல்லவா? கண்ணுக்கு வேண்டாத எந்த விஷயமும் உடனே வெளியே தள்ளி விடுவது கண்களுக்கு மிகவும் நல்லது தானே!

குறிப்பாக அழுகும் பொழுது மனதில் இருக்கும் அத்தனை பாரமும் மொத்தமாக இறக்கி வைத்தது போலிருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் அதிக துன்பத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் ஸ்டிரஸ், டென்ஷன் என்று ஆண்களை போல் புலம்ப மாட்டார்கள்.

sad-crying3

அழும் பொழுது ஸ்டிரஸ் உண்டாகும் சுரப்பிகளும் கரைந்து விடுகிறதாம் என்கிறது ஆராய்ச்சிகள் முடிவுகள். அழுதால் மானம் போய்விடும். அசிங்கமாகிவிடும் என்பது மிகவும் தவறான கருத்து. அழுதால் மனதில் தேக்கி வைத்திருக்கும் தேவை இல்லாத குப்பைகள் அனைத்தும் வெளியே வந்து மனம் தூய்மையாகி புத்துணர்வு கிடைக்கும். அதிகம் அழுபவர்கள் சிறு சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள்.

sad-crying4

இதனால் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு எப்பொழுது அழ வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அழுது தீர்த்து விடுங்கள். ஆனால் எப்போதும் அதையே நினைத்து அழுது கொண்டே இருக்காதீர்கள். ஒருமுறை அழுதுவிட்டு மனசு ரிலாக்ஸ் ஆகி விட்டால், அதன்பின் அதை பற்றிய சிந்தனை உங்களுக்கு வரக்கூடாது. வேறு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தில் மனதை செலுத்தி நீங்களும் தைரியசாலி தான் என்பதை மற்றவர்க்ளுக்கு முன்னால் நிரூபித்துக் காட்டுங்கள்.