Skip to main content

உடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

கடலை மாவுடன், நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சேர்த்து சுவையான, உடனடியான காலை உணவைத் தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், அரிசியில் செய்த இட்லி தோசையை தவிர்த்து, இந்த உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைப்பதற்கும் இது ஒரு சுவையான உணவு. இந்த அடையை எப்படி செய்வது என்பதை பார்த்து விடுவோமா?

kadalai-maavu-adai

கடலை மாவு அடை செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

தக்காளி-1

கேரட் – 1

சின்ன வெங்காயம் தோலுரித்து – 10

முதலில் தக்காளி, கேரட், சின்ன வெங்காயம் இவை மூன்று பொருட்களையும் மிக்சியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

kadalai-maavu-adai1

இஞ்சி சிறிதளவு, பூண்டு 4 திரி – துருவியது, மிளகு சீரகம் – 1 ஸ்பூன் நன்றாக பொடி செய்தது, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, ஓமம் – 1/2 ஸ்பூன் இடித்தது(கைகளால் நுணிக்கியும் போட்டுக் கொள்ளலாம்), உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தில், 1 கப் அளவு கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, மேற்குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும். அடை மாவு பதம் தெரியாதவர்கள் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை மொத்தமாக ஊற்றி கடலை மாவைக் கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும்.

kadalai-maavu-adai2

ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, உங்கள் கைகளை போட்டு நன்றாக பிசைந்து அடை மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, தோசைக் கல்லில் குறைவான அளவு எண்ணெய் ஊற்றி தேய்த்து, அதில் இந்த மாவை ஊற்றி, சிறிய அளவில் அடை பதத்தில் தேய்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான அடை தயார்.

இது கடலைமாவு என்பதால், உங்களால் தோசை போலவே தேக்க முடியும். அதற்காக தோசை அளவிற்கு மெல்லியதாக தேய்த்து விடாதீர்கள். முடிந்தவரை மெல்லிசாக தேய்த்து, மிதமான தீயில் வேக வைத்து, சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி மாவும் தேவையில்லை, தோசை மாவும் தேவையில்லை, இது செய்வதற்கு 15 நிமிடங்களே போதுமானது. ஆரோக்கியமானது!

Comments