Advertisement

ரேஷன் துவரம் பருப்பை வீணாக்காதீங்க! இப்படி வடை சுட்டு பாருங்க, வீட்டில் எல்லாரும் மிச்சம் வெக்காம விரும்பி சாப்ட்ருவாங்க.

ரேஷன் துவரம் பருப்பை வீணாக்காதீங்க! இப்படி வடை சுட்டு பாருங்க, வீட்டில் எல்லாரும் மிச்சம் வெக்காம விரும்பி சாப்ட்ருவாங்க.

ரேஷன் கடையில வாங்குற பொருட்கள் பாதி வீணாக தான் போகும். அதையே வேற முறையில் சமைத்துப் பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். ரேஷன் துவரம்பருப்பை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருக்கிறீர்களா? அப்போ இப்படி வடை சுட்டு பாருங்க! வீட்ல இருக்கிற எல்லாரும் இன்னும் வேணும் வேணும்னு கேக்குற அளவுக்கு ரேஷன் பருப்பு உங்க வீட்டு கிச்சன்ல ஹீரோவா மாறிடும்.

ration-toor-dal

கடைகளில் விற்கப்படும் பாலிஷ் செய்யப்பட்ட பருப்புகளை விட ரேஷன் கடையில் போடும் பளபளப்பு இல்லாத பருப்புகள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா? ஆனால் அதன் தரம் குறைவாக இருப்பதால் அதை நம்மால் சமையலில் சேர்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. இரண்டாம் தர, மூன்றாம் தரமுள்ள பருப்புகளையே நமக்கு ரேஷன் கடைகளில் போடுகிறார்கள். ஆரோக்கியம் தரும் இந்த பருப்பை சுவையாக எப்படி மாற்றலாம் என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் துவரம்பருப்பை 100 கிராம் என்ற அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுமார் ஒரு மணி நேரம் நல்ல தண்ணீரில் ஊறவையுங்கள். அதேபோல் வேறொரு பாத்திரத்தில் மூன்று வர மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி அதையும் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.

toor-dal-vadai

ஒரு மணி நேரம் சென்ற பிறகு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த சோம்பு, வர மிளகாய் உப்பு சேர்த்து அதனுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி போட்டுக் கொள்ளுங்கள். இவற்றுடன் துவரம் பருப்பையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மிக்ஸியை சுற்ற விடுங்கள். இப்போது கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். துவரம்பருப்பு போடும் பொழுது தண்ணீரை நன்கு வடிகட்டி விடுங்கள். தண்ணீர் சிறிதளவும் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, நறுக்கிய கருவேப்பிலை, துருவிய கேரட் சிறிதளவு, கைப்பிடி அளவு முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, இரண்டு பல் பூண்டு தட்டி சேர்க்கவும். முருங்கை இலை வைத்திருப்பவர்கள் முருங்கையிலை சேர்க்கலாம். இல்லை என்றால் விட்டுவிடுங்கள். முருங்கை இலை சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். பின்னர் இவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

vadai-oil-fry

இப்போது கலவை வடை தட்டும் பதத்திற்கு வந்திருக்கும். இதை சிறு சிறு வடைகளாக தட்டி சூடாக இருக்கும் எண்ணெயில் ‘டீப் ஃப்ரை’ செய்து எடுத்தால் ‘துவரம்பருப்பு மசால் வடை’ தயாராகிவிடும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எந்த பொருளையும் வீணாக்குவதற்கு பதிலாக புது விதமாக மாற்றி உபயோகப்படுத்துவது அனைவரிடமும் பாராட்டை பெற்றுத்தரும்.