Advertisement

ஹேர் ஸ்ட்ரைட்னிங்கு, இனி பியூட்டி பார்லர் போக வேண்டாம். செலவில்லாமல், உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை வைத்தே, நீங்களே ஸ்ரைட்னிங் பண்ணிக்கோங்க!

ஹேர் ஸ்ட்ரைட்னிங்கு, இனி பியூட்டி பார்லர் போக வேண்டாம். செலவில்லாமல், உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை வைத்தே, நீங்களே ஸ்ரைட்னிங் பண்ணிக்கோங்க!

பெண்கள் தங்களுடைய முடியை அழகாக மாற்றிக் கொள்வதற்கு, பியூட்டி பார்லர் சென்று ஹேர் ஸ்ரைட்னிங் செய்து கொள்வார்கள். பொதுவாகவே, முடியை நீளமாக அழகு படுத்திக் கொள்வதற்கு கொஞ்சம் செலவாகும். இனி அந்த செலவு வேண்டாம். பியூட்டி பார்லர்லருக்கும் செல்ல வேண்டாம். இயற்கையான, உங்க வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வைத்து, நீங்களே உங்களது தலைமுடியை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அது எந்த இரண்டு பொருள்? எப்படி ஸ்ரைட்டிங் பண்ணி கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair

இதற்கு தேவையான இரண்டே பொருள், காய்ச்சாத பச்சை பால், எலுமிச்சை பழமும் மட்டுமே. காய்ச்சாத பாலை ஒரு சிறிய டம்ளரில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். அதை நன்றாக குளித்துவிட்டு, ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்த உடனே, அந்த பால் சற்று கெட்டியாக திரிந்த மாதிரி, மாறும். பரவாயில்லை.

அதன் பின்பு, உங்களது தலைமுடியை சிக்கலில்லாமல் சீவி வைத்துக் கொள்ளவும். தலைமுடியை மூன்று, நான்கு பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். இது உங்களது தலை முடியின் அடர்த்தியை பொறுத்து உள்ளது. தலை முடி அடர்த்தி குறைவு என்றால், மூன்று பாகமாக பிரித்தால் போதும். மிக அடர்த்தியாக இருந்தால் நான்கு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள்.

hair-2

ஒவ்வொரு பாகங்களாக எடுத்து, முன்பக்கத்தில் போட்டுக் கொண்டு, அந்த முடியில் ஸ்பிரே பாட்டிலை வைத்து, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் பால் எலுமிச்சை கலந்த ஸ்ப்ரே அடித்து, பெரிய பல் உள்ள சீப்பினால், கீழ்பக்கமாக வாரி வாரி விட வேண்டும்.

நீங்கள் சரியான முறையில் உங்கள் தலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் பக்கம் வரை, உள்ள முடியில் ஸ்பிரே அடித்து விட்டு சீப்பை வைத்து கீழ்பக்கமாக வாரி விட வேண்டும். ஸ்பிரே பண்ணனும்! வாரிவிட்டு கொண்டே இருக்கணும்! (ஒவ்வொரு பாகமாக உங்களது முடியை பிரித்து எடுத்து ஸ்பிரே அடிக்க வேண்டும் அதன் பின்பு, சீப்பில் நன்றாக சீவ வேண்டும்.)

cobing-hair

ஸ்ப்ரே அடிப்பதன் மூலம் ஈரமான உங்கள் முடியாதது, சீப்பை வைத்து வாறும் போது, அப்போதே நேராக நிற்பதை உங்களால் காண முடியும். இவ்வளவுதாங்க! 20 நிமிஷம் தொடர்ந்து இப்படி உங்களது முடியை ஸ்ப்ரே அடிப்பது, வாருவதுமாக செய்தாலே போதும். 20 நிமிடங்கள் கழித்து, நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் மைல்டான ஷாம்பு போட்டு முடியை அலசி விடுங்கள்.

cobing-hair-1

உங்களது முடி ஸ்ட்ரைட்னிங் பண்ணினது போல பளபளப்பாக, அழகாக நீளமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரே ஒரு முறை, முயற்சித்து தான் பாருங்களேன்! எலுமிச்சை பழமும், பாலும் தலைமுடியில் சேர்ப்பதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. வாரத்திற்கு ஒருமுறை இப்படி பண்ணி கொண்டால் போதும். நிரந்தரமாக உங்களது முடி, அதன்பின்பு சுருலாமல் நீளமாகவே, சினிமா ஸ்டார் முடி போல், இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.