கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் காணாமல் போக, வெறும் 5 நாட்கள் மட்டுமே போதும். இப்படி செஞ்சு பாருங்க!
நம்முடைய முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம், நம்முடைய அழகை முழுமையாக குறைத்து, நோயாளிகள் போல் தோற்றத்தை உண்டு பண்ணி விடும். பெண்களின் வாய் பேசுகிறதோ இல்லையோ? கட்டாயம் கண்கள் அழகாக பேசவேண்டும். பெண்களுக்கு அதுதானே அழகு! உங்களுடைய கண்கள் அழகாக பேசுவதை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள்! உங்கள் கண்கள் இப்படி மாறினால், அதாவது கருவளையம் இல்லாமலிருந்தால்! இந்த கருவளையத்தை சுலபமாக எப்படிப் போக்கிக் கொள்ளலாம்? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாதி உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக தோல் சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குழவையில் போட்டு இடித்து பெஸ்ட் போல் செய்துகொள்ள வேண்டும். அதில் கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல்லை சேர்த்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, கண்களை மூடிக் கொண்டு, மெதுவாக கண்ணை சுற்றி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் போதும். 5 நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இரண்டு முறை. காலை, மாலை வேளை இப்படி செய்து பாருங்கள்! ஐந்தே நாட்களில் உங்களது கருவளையம் கட்டாயம் காணாமல் போகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதாவது உருளைக்கிழங்கு 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொண்டால், கற்றாழை ஜெல் 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டும் சமமான அளவு. இது கருவளையம் நீங்குவதற்கான ஒரு வழி. சிலபேருக்கு கண்களுக்குக் கீழே உள்ள இடங்களில் தோல் மடிந்து சுருக்கம் இருப்பது போல் தோற்றம் உண்டாகும். இதை நீக்குவதற்கும் ஒரு சுலபமான வழி உள்ளது. அதையும் தெரிந்து கொள்வோம்.
உங்கள் வீட்டில் கொஞ்சம் தடிமனான அளவு உள்ள ஸ்பூன் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் அளவு உள்ளவதாக இருந்தால் போதும். அதை ஃப்ரீசரில் ஒரு 1/2 மணி நேரம் வைத்து விட்டு, அதன் பின்பு அந்த ஸ்பூனின் தலைப்பக்கம், அதாவது நாம் சாப்பிடும் பக்கம் வளைவாக இருக்கும் அல்லவா? அதை உங்கள் கண்கள் மீது வைத்து மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூனிங் உள் பக்கத்தை உங்கள் கண்கள் மேல் வைத்து, அப்படியே கடித்தவாறு வைக்கவேண்டும். கொஞ்சம் எடுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அந்த ஸ்பூனில் இருக்கும் குளிர்ச்சி தன்மை குறையும் நேரம் வரை வைத்தால் போதும். தினமும் இப்படி செய்து வர கண்கள் அழகாக மாறும். கண்களின் சுருக்கம் நீங்கும்.
இது கோடைகாலம் என்பதால், வெள்ளரிக்காய் அதிகமாகவே கிடைக்கும். அதை வாங்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து விட்டு, ஐஸ் டிரேயில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றிக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வெள்ளரிக்காய் ஐஸ் கட்டியை எடுத்து, கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு நிமிடம் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு விட்டுவிட்டு, மறுபடியும் இரண்டு நிமிடம் மசாஜ் செய்து பாருங்கள். 15 நிமிடங்கள் தொடர்ந்து விட்டு விட்டு மசாஜ் செய்து கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும். தினம்தோறும் இப்படி செய்வதில் தவறில்லை.
வெள்ளரிக் காய்களை வட்ட வடிவில் வெட்டி கண்களில் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அந்த வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி, அதன் பின்பு சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து விட்டு, எடுத்து உங்களது கண்களில், காலை ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் வைத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பெண்களின் கண்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.