Skip to main content

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்


தலையில் பொடுகு வர காரணம் பல உண்டு. தலையை நன்கு துவட்டாதது, எப்போதும் எண்ணெய் பசையோடு அழுக்காக தலையை வைத்துக்கொள்வது, தலையை வறட்சியாக வைத்துக்கொள்வது, தேவையற்ற கெமிக்கல்கள், ஷாம்பு போன்றவற்றை தலைக்கு போடுவது, பொடுகுள்ளவரின் சீப்பை நாமும் உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் பொடுகு வர வாய்ப்புண்டு. பொடுகானது தலையில் நீண்ட காலம் நீடித்தால் முடி கொட்ட துவங்கும். ஆகையால் தலையை நன்கு பராமரித்து பொடுகை விரட்டுவது அவசியம். அந்த வகையில் பொடுகை விரட்ட சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

podugu thollai

குறிப்பு 1 :

பாலுடன் சிறிதளவு மிளகு தூள் கலந்து தலையில் நன்கு தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் சிகைக்காய் கொண்டு தலைக்கு குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 2 :

சுத்தமான வெந்தயத்தை அரைத்து பொடி செய்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை படிப் படியாக குறையும் அதோடு உஷ்ணமும் நீங்கும்.

குறிப்பு 3 :

வேப்பிலை கொழுந்தை துளசியோடு சேர்த்து நன்கு அரைத்து சாறு பிழிந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து சிகைக்காய் கொண்டு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

Neem

குறிப்பு 4 :

அருகம்புல்லை பொடி செய்து அரைத்து சாறு பிழிந்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெயோடு சேர்த்து காய்ச்சி ஆறவைத்து அதை தினசரி தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 5 :

உப்பு இல்லாத காய்ந்த வேப்பம் பூவை 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்து பொடியாக்கி 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

vepilai ennai

மேலே கூறிய குறிப்புகளில் ஏதாவது ஒன்றை முறையாக செய்து பொடுகை தலையில் இருந்து விரட்டலாம். பொடுகு நீங்கிய பிறகு தலையை சுத்தமாக வைத்துக்கொள்வது, வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்றவை அவசியம்.