Advertisement

நுங்கு பயன்கள்

நுங்கு பயன்கள்

சமைக்கப்பட்ட உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு அவற்றின் முழுமையான சத்துகள் கிடைக்கின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தில் “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம் அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”. இந்த நுங்கு சாப்பிட்டு வருவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

நுங்கு பயன்கள்

அம்மை நோய்கள் 

பொதுவாக கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் இக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இக்காலத்தில் உடலுக்கு வலுசேர்க்க கூடிய உணவாகவும், அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய ஒரு உணவாக நுங்கு இருக்கிறது. எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவது நல்லது.

வெப்ப தாக்கம் 

கோடை காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலை பாதிக்காமல் காக்கும்.

கருவுற்ற பெண்கள் 

கருவுற்ற பெண்களின் வயிற்றில் குழந்தை வளர தொடங்கும் போது பல பெண்களுக்கு சாப்பிடும் உணவு செரிமானம் ஏற்படாமல் போவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சரியான விகிதத்தில் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

உடல் சத்து 

உடல் அதிகம் வெப்பமடையும் வகையில் பணிபுரிபவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபத்தில் நீர்ச்சத்து இழப்பு மற்றும் இன்ன பிற அத்தியாவசிய சத்துகளுக்கும் உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளை மீண்டும் ஈடு செய்யும்.

கல்லீரல் 

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. நுங்கு சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

வயிறு சம்பந்தமான நோய்கள் 

நுங்கு நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவென்பதால் சிறந்த ஒரு இயற்கை மலமிளக்கி உணவாக இருக்கிது. வயிறு மற்றும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் செய்கிறது. இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்ட ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.

மார்பக புற்று 

இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் முதன்மையாக இருப்பது மார்பக புற்று நோய் ஆகும். இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பெண்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, நுங்கையும் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். இதில் இருக்கும் “ஆன்தோசயனின்” எனப்படும் வேதி பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

வாந்தி, குமட்டல் 

கருவுற்றிருக்கும் பெண்கள், ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள், வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படும் போதும் குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சுரப்புகளை சரி செய்து அடிக்கடி வாந்தி எடுக்கம் பிரச்னையை போக்கும்.

உடல் எடை குறைப்பு

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் நுங்கு சிறப்பாக செயல் படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

கண்பார்வை 

கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதால் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண்பார்வை திறனையும் மேம்மபடுத்துகிறது.