Advertisement

அரிசி கஞ்சி அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

அரிசி கஞ்சி அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மனிதர்கள் சாப்பிடுவதற்கு என்றே பல வகையான உணவு தானியங்கள் இருந்தாலும், உலகில் சரிபாதி மக்கள் சாப்பிடும் உணவாக அரிசி தானியம் இருக்கிறது. அரிசி தானியம் கொண்டு பல வகையான உணவுகள் செய்யப்பட்டு மக்களால் புசிக்கப்படுகின்றன. அதில் உடலுக்கு நன்மை தருவதும், பல நோய்களை தீர்க்கும் எளிய உணவாக அரிசிக்கஞ்சி இருக்கிறது. அரிசிக்கஞ்சியை கொண்டு நமக்கு ஏற்படும் உடல் நல குறைபாடுகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

arisi-kanji

அரிசி கஞ்சி நன்மைகள்

கார்போஹைடிரேட் சத்து 

அரிசி கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாக இருக்கின்றன. அரிசிக்கஞ்சியை குடிப்பதால் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்கள் கார்போஹைட்ரேட் சத்துகளை நொதித்து உடலுக்கு மிகுதியான சக்தியை உண்டாக்குகிறது. காலையில் அரிசி கஞ்சி அல்லது அரிசி பழுதை அருந்துபவர்களுக்கு அன்றைய நாள் முழுவதும் சோர்வு என்பதே ஏற்படாது.

மலச்சிக்கல் 

மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நமது அன்றாட உணவில் நார்ச்சத்துக்கள் அதிகம் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசிக் கஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் காலையில் அரிசி கஞ்சி பருகுபவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகளும் மலத்துடன் சேர்ந்து வெளியேறி, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

arisi-kanji


நீர்ச்சத்து 

நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற ரத்தம் அதிகம் கட்டியாகாமல் இருக்க தேவையான அளவு நீர்ச் சத்து நம் உடலில் இருக்க வேண்டும். கோடைக்காலங்களில் அதிக வியர்வை காரணமாக நீர் சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய உப்புகள் உடலில் இருந்து வெளியேறுகின்றன. அரிசி கஞ்சியை இக்காலங்களில் பருகுபவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தேவை நிறைவு செய்யப்படுகிறது.

ஜுரம், காய்ச்சல் 

ஜுரம், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக அரிசி கஞ்சி இருக்கிறது. அரிசிக் கஞ்சியில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. எனவே சுரம் காய்ச்சல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு மூன்று வேளைகளும் சிறிதளவு அரிசி கஞ்சியை கொடுப்பதால், நோய்த் தொற்றுகள் நீங்கி, ஜூரமும் குறைவதோடு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெற்றுத்தரும்.

arisi-kanji

வயிற்றுப்போக்கு 

அதிக வெப்பத்தை உண்டாக்கும் கோடை காலங்களிலும், கெட்டுப்போன உணவுகள் சாப்பிடுவதாலும் சிலருக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதனால் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைகிறது. இச்சமயங்களில் அரிசிக்கஞ்சி சாப்பிடுவதால் உடலில் நீர்சத்து இழப்பை ஈடுகட்டி, உடலுக்கு வலுவைத் தருகின்றது வயிற்றுப்போக்கு ஏற்படுவதை குறைக்கிறது.

பசி உணர்வு 

பசி உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். ஒரு சிலர் உணவை சாப்பிடுவதற்கு முன்பாக நன்கு பசி உணர்வைத் தூண்ட பழச்சாறுகள், சூப்போன்றவற்றை அருந்துகின்றனர். அரிசி கஞ்சியும் பசியை தூண்டும் பானமாக இருக்கிறது. அதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் நன்கு பசியை தூண்டும். சாப்பிட்ட உணவும் எளிதில் செரிமானமாகும்.

arisi-kanji

முகப்பொலிவு 

வயது முதிர்வின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையானது. சில நபர்களுக்கு மிக இளவயதிலேயே முகத்தில் தோல் வரண்டு, முக பொலிவு இழந்து காணப்படும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை சேர்த்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி பளிச்சென்று மிளிர வைக்கும்.

தோல் நோய்கள் 

அரிசிக் கஞ்சியில் நிறைந்திருக்கும் ஸ்டார்ச் சத்து தோல் ரணங்களை குணமாக்கும் தன்மை கொண்டது. சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. ஒரு காட்டன் துணியில் கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் கட்டி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு கடைப்பிடித்து வந்தால் சொறி, சிரங்கு ரணம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.

arisi-kanji

வேர்க்குரு 

மிக வெப்பமான கோடை காலங்களில் நமது உடலில் அதிக வியர்வை ஏற்படுகிறது. அந்த வியர்வைகள் சில சமயங்களில் உடலில் வேர்க்குருகளாக மாறி அரிப்பு, தேமல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. வேர்க்குரு களை போக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக அரிசிக்கஞ்சி இருக்கிறது. தொடர்ந்து சில நாட்கள் வேர்க்குரு மீது அரிசி கஞ்சியை தடவி வந்தால் வேர்குருகள், தேமல் போன்றவை மறையும்.

தலைமுடி 

சிலருக்கு தலை முடி கடினமாகவும் பளபளப்பு தன்மையை இழந்து காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலை முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியை கழுவ வேண்டும். மேலும் தலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இந்த முறை உதவுகிறது.