Advertisement

தேங்காய் பால் பயன்கள்

தேங்காய் பால் பயன்கள்

நமக்கு பல வகையில் நன்மைகளை தரும் மரங்களும் ஒரு வகையில் பார்க்கும் போது தெய்வங்களாகவே கருத தோன்றுகின்றன. இதன் காரணமாக தான் நமது கோவில்களில் “தல விருச்சம்” என்கிற பெயரில் மரங்களை இறைவனின் அம்சமாக கருதி வழிபட்டனர். அந்த வகையில் நமது நாட்டின் தெய்வீக காரியங்களில் அதிகம் பயன்படுவதும், அன்றாட சமையலில் பயன்படுபடுவதும் ஆன “தேங்காய்”, சாப்பிடுபவர்களுக்கு பல நன்மைகளை தருவதாகும். அந்த தேங்காயில் இருந்து பெற படுவது தான் “தேங்காய் பால்”. தேங்காய் பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

coconut 1

தேங்காய் பால் பயன்கள்

தசை நரம்புகள் இறுக்கம்

வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

உடல் எடை

பெரும்பாலானோர் தேங்காய் பால் அதிகம் அருந்தினால் உடல் எடை கூடிவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

இரும்பு சத்து

அனைவருக்குமே உடலில் இரும்பு சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.

எலும்புகள்

எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும்

அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

இளமை தோற்றம்

தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.

கீல்வாதம்

கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது. செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

உடல் சுத்தி

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்துமே நச்சுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.

புராஸ்டேட் சுரப்பி

ஆண்கள் அனைவருக்குமே தங்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு அடியில், மலக்குடலுக்கு மேற்புறமாக அமைந்திருக்கும் சுரப்பி தான் புராஸ்டேட் சுரப்பி. இன்று பல ஆண்களுக்கும் நடுத்தர வயதை நெருங்கும் காலத்தில் புராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் நிலை இருக்கிறது. தேங்காய் பால் அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று ஏற்படுவததற்கான வாய்ப்புகள் குறைகிறது.

நோய் எதிர்ப்பு திறன்

ஒரு சிலருக்கு அவ்வப்போது ஜுரம், சளி போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் அவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் வலிமையின்றி இருப்பது தான். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் உடலை சுலபத்தில் தொற்றி தாக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

நீரிழிவு

உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் வந்த பின்பு அவதிப்படுவதை விட அந்நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. மாங்கனீஸ் சத்து உடலுக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. இந்த சத்து நீரிழிவு ஏற்படாமல் உடலை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.