Advertisement

உளுந்து களி பயன்கள்

உளுந்து களி பயன்கள்

நம் நாட்டு உணவுகளில் சாப்பிடும் உணவின் ருசியை அதிகரிக்கவும், உடலுக்கு சக்தியை தருவதற்கும் பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படி நம் சமையலில் அதிகம் உபயோகப்படுத்துதப்படும் ஒரு பருப்பு வகை தான் “உளுந்து”. இந்த உளுந்து பருப்பை, “உளுந்து களி” ஆக்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ulundhu

உளுந்து களி பயன்கள்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்

உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. சீத பேதி எனப்படும் மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

சிறுநீரகம்

சிறுநீரகங்களில் கழிவு உப்புகள் தங்கி கற்களாக உருமாறுவது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். வாரமொருமுறை உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.

ulundhu kali 4

ஊட்ட உணவு

உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை தன்னகத்தே கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்.

நரம்பு கோளாறுகள் 

உடலின் சரியான இயக்கம் மற்றும் செயல் பாட்டிற்கு நரம்புகளின் செயல் இன்றியமையாதது. நரம்பு தளர்ச்சி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, ஞாபக மறதி போன்ற நரம்புகள் தொடர்புகொண்ட வியாதிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை உணவின் போது உளுந்து களி சாப்பிடுவதால் மேற்கூறிய வியாதிகள், பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.

ulundhu kali 2

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் இருப்பது அவசியமாகும். உளுந்து களியை அவ்வப்போது சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உளுந்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடலின் சேர்த்து, ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு பாதிப்பு கடுமையாகாமல் காக்கிறது.

தசை பலம்

உடலின் வலிமைக்கு காரணமாக இருப்பது தசைகள் தான். கடினமாக காரியங்கள் செய்வதற்கு உடலில் தசைஅடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்து களியை அவசியம் சாப்பிட வேண்டும்.

ulundhu kali 3

ஆண்மை குறைபாடுகள்

போதை வஸ்துக்களை அதிகம் உபயோகிப்பதாலும், வெப்பமான சூழல்களில் அதிகம் இருப்பதாலும் சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு, மலட்டு தன்மை ஏற்படுகிறது. உளுந்து களி இத்தகைய பாதிப்பை கொண்ட ஆண்களுக்கு சிறந்த இயற்கை உணவாகும். உளுந்து களியை வாரம் நான்கு முறை சாப்பிடுவது ஆண்களின் மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடுகளை நீக்கும்.

கர்ப்ப கால உணவு

கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

ulundhu kali 5

தலைமுடி

இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் தலைமுடி கொட்டுதல் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பக்க விளைவுகள் ஏற்படுத்தும் ரசாயனம் நிறைந்த மருந்துகளை உட்கொள்வதை விட, உளுந்து களி சாப்பிட்டு வந்தால் தலைமுடிகள் வேர்கள் அதிகம் பலம் பெற்று முடிஉதிர்வதை தடுக்கும்.

இதயம்

உளுந்து பொட்டாசியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்டது. உளுந்து களி சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்தத்தை உடலில் பாய்ச்சும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைகிறது.