உங்களுக்கு சிவப்பான, அழகான குழந்தை பிறக்க இவற்றை கடைபிடித்தால் போதும்
உலகெங்கும் பலவேறு நிற மாறுபாடுகளை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். அனைத்து நிற மனிதர்களுமே ஒவ்வொரு வகையில் அழகு தான் என்றாலும், நமது நாட்டில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சற்று அடர் நிற தோலை கொண்ட பெற்றோர்கள் தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் நல்ல வெளிர், சிவப்பு நிறத்தோடு பிறக்க வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி குழந்தைகள் சிவப்பாகவும், அழகாகவும் பிறக்க கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை அழகாக பிறக்க
தர்பூசணி
வெயில் காலத்தில் மட்டுமே அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு பழமாக தர்பூசணி பழம் இருக்கிறது. இக்காலகட்டத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் அவ்வப்போது தர்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. தர்பூசணி பழத்தில் தோலின் நிறத்தை பாதுகாக்கும் மெலனின் சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதை சாப்பிடுவதால் பிறக்கின்றன குழந்தை அழகிய நிறத்தோடு பிறப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.
குங்குமப்பூ
வயிற்றில் கருவை சுமந்திருக்கும் பெண்கள் பலருக்கும் தங்களின் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கும். இதற்கு பழங்காலம் முதலே நமது முன்னோர்கள் குங்குமப்பூவை பயன்படுத்தி வந்துள்ளனர். குங்குமப்பூ விலை மிகவும் அதிகம். எனவே பொருள் வசதி மிக்கவர்கள் தினமும் அல்லது வாரத்திற்கு குறைந்த பட்சம் குங்குமப்பூ கலந்த பால் தங்கள் வீட்டின் கர்ப்பிணி பெண்கள் அருந்துவதற்கு கொடுத்து வந்தால் பிறக்கின்ற குழந்தை நல்ல மேனி நிறத்தோடும், அழகோடும் பிறக்கும்.
சோம்பு
கர்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் நன்கு இருப்பது அவசியம். நமது சமையலில் அடிக்கடி உபயோகப்படும் ஒரு பொருளாக இருக்கிறது சோம்பு. இந்த சோம்பு ஊறவைக்கப்பட்ட்ட நீரை கர்ப்பிணி பெண்கள் காலையில் அருந்தி வந்தால் அவர்களின் உடற்சோர்வு நீங்கும். மேலும் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிறத்தை மேம்படுத்தி அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கச் செய்யும்.
ஆரஞ்சு பழம்
அனைத்து வயதினரின் எலும்புகள் வலுவோடு இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கவும் ஆரஞ்சு பழங்கள் உதவுகின்றன. கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலின் சத்து தேவையை பூர்த்தி செய்து, உடலுக்கு புத்துணர்ச்சியை ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும். மேலும் இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து கருவில் வளரும் குழந்தைக்கு பலத்தை அளிப்பதோடு, சிவந்த மேனி அழகையும் தரும் ஆற்றல் ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.
நெய்
பசும்பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணை மற்றும் அந்த வெண்ணையில் இருந்து பெறப்படுகின்ற நெய் ஆகியவை உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றது. அதுவும் கருவுற்றிருக்கும் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி தங்களின் உணவில் பசுநெய் கலந்து சாப்பிடுவதால் அவர்களுக்கும், அவர்களின் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை அளிப்பதோடு, வயிற்றில் வளரும் குழந்தையின் வெளிப்புற தோலின் நிறத்தை வெளிர் நிறமாக மாற்றும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பு புரதங்கள் அதிகம் நிறைந்த ஒரு பருப்பு வகையாகும். மேலும் இந்த பருப்பில் நமது தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வறட்சி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் அடிக்கடி பாதாம் பருப்பை சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு சத்து அளிப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் தோலின் நிறத்தை மேம்படுத்தும் சத்துக்களும் பாதாம் பருப்பில் இருக்கிறது.
முட்டை
கோழி முட்டைகள் பல சத்துகள் நிறைந்த ஒரு உணவாகும். அதிலும் நாட்டு கோழி முட்டை எண்ணிலடங்கா நன்மைகளை உண்பவர்களுக்கு தரக்கூடியது. நமது கிராமப்புறங்களில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை வெளிர் நிறங்கொண்டு பிறக்க கருவுற்ற இரண்டாம், மூன்றாம் மாதங்களில் கோழி முட்டைகளை கர்ப்பிணி பெண்கள் உண்பதற்கு கொடுப்பர். இதனால் குழந்தை நல்ல நிறம், அழகோடு பிறக்கும் என்பது சிலரின் கருத்தாகும்.
தேங்காய் பால்
நமது நாட்டின் அன்றாட சமையலில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாக தேங்காய் உள்ளது. தேங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளையும், தேங்காய் பாலையும் கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் அருந்தினால் பிறக்கின்ற குழந்தை நல்ல சிவந்த நிறம் மற்றும் மேனி மினுமினுப்போடு பிறக்கும் என்பது பழங்காலம் முதலே கருதப்பட்டு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் தேங்காய் அதிகம் உபயோகிப்பதால் அம்மாநில மக்கள் நல்ல நிறத்தோடு இருக்கின்றனர் என இதற்கு உதாரணம் கூறப்படுகிறது.
பால்
பாலில் பல வகை இருந்தாலும் பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் வகைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பசும்பால் தரத்தில் சிறந்தவை. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி பால் அருந்துவதால் அவர்களுக்கு சத்துக்கள் தருவதோடு, அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தோலின் நிறம் சிவப்பாக, வெளிர் நிறமாக மற்றும் திறன் பசும்பாலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.