Advertisement

சிறுபசலை மூலிகை கீரை சாப்பிட்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

சிறுபசலை மூலிகை கீரை சாப்பிட்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

மூலிகை செடிகள் என்பது அடர்ந்த காடுகளில் வளர்வது மட்டுமல்ல, நமது வீட்டைச் சுற்றிலும் உயிர் காக்கும் பல வகையான மூலிகை செடிகள் கீரைகள் உள்ளன. அந்த வகையில் அதிகம் பேரால் உண்ணபடாததாக இருக்கும் கீரை வகைகளில் ஒன்றாக சிறுபசலைக்கீரை இருக்கிறது. இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. இந்த சிறு பசலைக் கீரை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ ரீதியான பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிறு பசலைக்கீரை பயன்கள்

புண்கள்

எதிர்பாராமல் அடிபடும் போது உடலில் ஏற்படும் ரத்த காயங்கள் புண்களாக மாறி நீண்ட காலமாக ஆறாமல் இருந்தால் நமக்கு வலியும், வேதனையும் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறு பசலை கீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்ப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை.

நோய் எதிர்ப்பு

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

வயிற்று புண்கள்

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிறு பசலை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

சிறுநீரகங்கள் 

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலை கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

கல்லீரல்

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

காச நோய்

காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து, நுரையீரல்களில் தங்கி அந்த உறுப்புகளை பதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு சிறு பசலை கீரை கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.

தோல் வியாதிகள்

நமது உடலை காக்கும் அரணாக இருக்கும் தோல்களில் ஏற்படும் நோய்கள் பிரச்சினைகளுக்கு பலவகையான மருந்துகளை உபயோகிக்கும் நிலை இருக்கிறது. சிறு பசலை கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. சிறு பசலை கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூலம்

மிக அதிக அளவில் ஏற்படக்கூடிய வியாதிகளில் ஒன்றாக மூலம் இருக்கிறது. மூல நோய் ஏற்பட்டவர்களுக்கு மனதில் நிம்மதியின்மையும், உடல் அசவுகரியமும் உண்டாகும். நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் பச்சையாக சிறிது சிறு பசலை கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக சிறு பசலை கீரை செயல்படுகிறது. இந்த சிறு பசலை கீரையை கடுமையான இரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

புற்று நோய்

பல நோய்களுக்குத் தீர்வாக இருக்கும் சிறுபசலைக்கீரை புற்றுநோய்க்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது. புற்று நோயாளிகளுக்கு அவர்களின் உடலின் புற்று செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சிறு பசலை கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.