Advertisement

இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

மனிதர்களுக்கு சளி மற்றும் இரும்பல் வந்துவிட்டால் படாத பாடு படுகின்றனர். சிலர் இரவில் தூங்க முடியாமல் இரும்பிக்கொண்டே இருந்து அவதிப்படுவதுண்டு. பெருபாலானோருக்கு பருவநிலை மாற்றத்தாலேயே சளி மற்றும் இரும்பல் தொல்லை அதிகரிக்கிறது. இதில் இருந்து விடுபட சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

caugh(irumal)

குறிப்பு 1 :

இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இரும்பல் விரைவில் சரியாகும்.

குறிப்பு 2 :

நான்கு முதல் ஐந்து பல் பூண்டை நெய்யில் நன்கு வதக்க வேண்டும் அதன் பிறகு அதை நன்கு நசுக்கி, சூப்பிலோ அல்லது குழம்பிலோ போட்டு சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.

குறிப்பு 3 :

வறட்டு இருமல் சரியாக கருவேல மர கொழுந்தினை எடுத்து அதில் உள்ள சாறை நன்குபிழிந்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.

hot water(sudu thanneer)

குறிப்பு 4 :

5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும்.

குறிப்பு 5 :

இருமல் குணமாக, முருங்கை கீரையில் இருந்து சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு அதோடு தேன் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டை பகுதியில் தடவலாம். இதன் மூலம் தொண்டை வலியும் குறையும். குறிப்பு: சுண்ணாம்பை அதிக அளவில் சேர்க்கக்கூடாது.

Murugai keerai

குறிப்பு 6 :

ஒரு டம்ளர் வெண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதை குடிக்கவும். இதன் மூலம் இருமல், சளி குணமாகும்.

மேலே உள்ள குறிப்புகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.