Skip to main content

மாசிக்காய் பயன்கள்

மாசிக்காய் பயன்கள்

பல்லாயிரக்கணக்கான உயிர்காக்கும் மூலிகைகள் விளைகிற நாடு இந்திய நாடு. இதில் எத்தனையோ வகையான மூலிகைகளை நாம் வாழ்வில் அவ்வப்போது பயன்படுத்தி நலம் பெறுகிறோம். அந்த வகையில் பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் மரத்தின் பிசினிலிருந்து வரும் ஒரு மூலிகை தான் மாசிக்காய். இந்த மாசிக்காய் மூலிகையை பல்வேறு பக்குவத்தில் பயன்படுத்தும் போது ஏற்படும் நன்மைகளை இங்கு காண்போம்.

masikai 3

மாசிக்காய் பயன்கள்

கருப்பை நலம்

பெண்களுக்கே உண்டான ஒரு இயற்கை வரம் தாய்மை ஆகும். பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் பல பெண்களுக்கு. அவர்கள் இந்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும்.

புண்கள்

மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம் அளிக்கும். தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

masikai 1

வயிற்று போக்கு

கெட்டு போன உணவுகளை உண்பதாலும், சீதோஷண நிலை மாறுவதாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்ப்பட்டு அவதியுறுவர். இப்படிப்பட்டவர்கள் மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்பட்டும் வயிற்று போக்கு பிரச்சனைக்கும் இது சிறந்த தீர்வாகும்.

ரத்தப்போக்கு

நமது அன்றாட வாழ்க்கையில் சில சமயம் எதிர்பாராத விதமாக நமக்கு அடிபடுகிறது. சமயங்களில் ரத்த காயம் கூட ஏற்படுகிறது. அடிபட்ட காயத்தில் ரத்தம் அதிகம் வெளியேறுவதை தடுக்க, மாசிக்காய்கள் சிலவற்றை நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை ரத்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ரத்தம் வெளியேறுவது நிற்கும்.

masikai 2

விஷ முறிவு

போதைப்பொருட்கள், வேறு சில ரசாயனங்களும் விஷ தன்மை கொண்டவை. இதை உண்டவர்கள் உடலில் இருக்கும் இந்த நச்சை நீக்குவதற்கு மாசிக்காய் தூளை 5 கிராம் அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால் அபின், கஞ்சா, மது, மயில் துத்தம், மர உப்பு போன்ற பொருட்களின் நஞ்சை முறிக்கும்.

சுவாசப்பிரச்னைகள்

குளிர்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படுகிறது. மேலும் டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நமது சுவாசப்பாதைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட இப்பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

ஆண்மை கோளாறுகள்

இன்றைய காலத்தில் மனஅழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் சில குறைபாடுகள் பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாசிக்காய், ஜாதிகாய், ஆவாரம் பசை, ஏலக்காய் இவற்றை எல்லாம் நன்கு பொடித்து இதனுடன் வல்லாரை இலைப்பொடியை சேர்த்து, நெய்யில் வதக்கி சாப்பிட நரம்புகள் வலுப்பெற்று ஆண்மை குறைபாடுகள்.

சருமம் பாதிப்பு

நமக்கு இளமையான தோற்றம் தருவதில் நமது சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், இளமை தோற்றம் பெறவும் மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து உடலுக்கு பூசி குளித்து வர மேற்கூறிய பலன்கள் கிடைக்கிறது.

வாய்ப்பிரச்சனைகள்

நாம் உணவை உண்பதற்கு வாய், நாக்கு, பற்கள் போன்ற உறுப்புக்கள் உதவி புரிகின்றன. மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும். ஈறுகள் உறுதிபெறும். ஈறுகளில் ரத்தம் வடிவது நிற்கும். பற்சொத்தை மற்றும் உஷ்ணம் காரணமாக வாயில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

இதயம்

ஒரு சிலர் மனம் பதட்டமடைவதாலும் அதிகம் உடலை வருத்தி கொள்வதாலும் இதயத்தில் படபடப்பு தன்மை அதிகம் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க மாசிக்காய் பொடியை சிறிது பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால் சிறிது நொடிகளிலேயே இதய படபடப்பு நிற்கும்.

Comments