Advertisement

எப்படிப்பட்ட நெஞ்சு சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலும் ஒரே நாளில் தீரவேண்டுமா? பாட்டி வைத்தியம்.

எப்படிப்பட்ட நெஞ்சு சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலும் ஒரே நாளில் தீரவேண்டுமா? பாட்டி வைத்தியம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சனை, காய்ச்சல், இருமல் இப்படி இருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். மருத்துவரிடம் சென்று மருந்து சாப்பிடுவோம். மூன்று நாட்களுக்கு பின்பு திரும்பவும், சளிக்காய்ச்சல் என்று வந்து கொண்டே இருக்கும்.  மருந்து தான் தீருமே தவிர, நோய் தீராமல் அப்படியே இருக்கும். நிரந்தரமான தீர்வுக்காக நம்முடைய பாட்டி சொல்லி வைத்திருக்கும் கை வைத்தியத்தையும் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே! நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்து தான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து தயார் செய்யப்படும் கசாயத்தின் மூலம் நம் உடம்பில் இருக்கும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றால், அதை ஒரு முறை முயற்சி செய்து பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. பாட்டி சொன்ன அந்த வைத்தியம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா?

mooligai

இதற்கும் தேவையான பொருட்கள்:

தண்ணீர்-ஒரு டம்ளர்

மிளகு-15 (1/2 ஸ்பூன் அளவிற்கு)

சீரகம்- 1/2 ஸ்பூன் அளவு

வர மல்லி தூள்-1/2ஸ்பூன்

இஞ்சி-சிறிய துண்டு

சமையல் மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை

காம்பு கிள்ளிய வெற்றிலை-1

இந்த கசாயத்திற்க்கு வரமல்லி மிகவும் அவசியம். கடைகளில் வாங்கிய மல்லித் தூளை தயவு செய்து சேர்க்க வேண்டாம். உங்கள் வீட்டில் அரைத்த மல்லித்தூள் இல்லை என்றால், முழு வரமல்லியை ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த கசாயத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். செய்முறைக்கு செல்லலாமா!

dhaniya

முதலில் ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம். மிளகையும், இஞ்சியையும் மட்டும் கல்லில் ஒன்றும் இரண்டுமாக நச்சு போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலையை சிறு துண்டுகளாக கிழித்து போட்டுக் கொள்ளவும்.


அதன் பின்பு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டும்வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றி, சுண்டி அரை டம்ளர் ஆன பின்பு, வடிகட்டி மூலம் திப்பிகளை எடுத்து விட்டு, அந்தத் தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிப்பது நல்ல பலனைத் தரும். பெரியவர்கள் என்றால் இந்த அரை டம்ளர் தண்ணீரையும் முழுமையாக குடித்து விடலாம். சிறு பிள்ளைகளாக இருந்தால் கால் டம்ளர் கசாயமே போதுமானது. குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு சங்கடை அளவு தாராளமாக கொடுக்கலாம்.

kasayam

உங்கள் உடம்பில் எப்படிப்பட்ட சளி இருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இந்த கஷாயத்திற்கு உண்டு. இரவு நேரத்தில் இந்த கசாயத்தை குடிக்க வேண்டாம். பகல் நேரத்தில் குடித்தால் மட்டுமே போதும். உங்களை ஆரோக்கியமாக வைக்கவும், எந்த ஒரு பக்க விளைவுகள் வராமல் இருக்கவும் இயற்கையான மருந்து இது. தினம்தோறும் குடிக்கக்கூடாது. அதிகமாக குடிக்கக்கூடாது. பிரச்சனை இருக்கும் போது ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிக்க வேண்டும். உங்கள் உடம்பில் ஏதேனும் பிரச்சனைக்காக, தொடர் மருத்துவ ஆலோசனையில் உள்ளவர்களாக இருந்தாலும் இதை பயன்படுத்தவேண்டாம்.