கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
நமது நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். அப்படி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன அதில் ஒன்றுக்கு தான் கத்திரிக்காய் இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கத்திரிக்காய் பயன்கள்
மலச்சிக்கல்
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
இதயம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
சிறுநீரக கற்கள்
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்
மூலம்
அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சுவாசக் கோளாறுகள்
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
உடல் எடை குறைப்பு
கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
இரும்பு சத்து குறைப்பு
நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.
புகை பழக்கம்
புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. கத்திரிக்காய் புகையிலையில் இருக்கும் நிக்கோடின் ரசாயனம் சிறிதளவு கொண்டிருக்கிறது. ஆனால் கத்திரிக்காயில் இருக்கும் இந்த நிக்கோடின் ரசாயனம் புகை பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.
கல்லீரல்
மாமிச உணவுகளை தினமும் அதிகளவு சாப்பிட்டு வருபவர்களுக்கும், தீவிர மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.
ஊட்டச்சத்து
கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.