வியாழன், 3 பிப்ரவரி, 2022

ஓட்ஸ் பயன்கள்

ஓட்ஸ் பயன்கள்

உலகில் பெரும்பாலான மனிதர்கள் உண்ணும் முக்கிய உணவுகள் அரிசி அல்லது கோதுமை தானியங்களில் இருந்து செய்யப்பட்டதாகவே இருக்கிறது. வேறு பல வகையான உணவு தானியங்களும் உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று தான் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பிரபலமான “ஓட்ஸ்”. இந்த ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

oats 3

ஓட்ஸ் பயன்கள்

இதய நோயாளிகள் 

மரைடைப்பு ஏற்பட்டு மீண்டவர்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பதோடு, இதயத்தை பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஓட்ஸில் பீட்டா குலுக்கன் என்கிற பொருள் நிறைந்திருக்கிறது இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதய தசைகளை வலுப்படுத்துகிறது.

நீரிழிவு 

சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நீரிழிவு நோயாளிகள் உட்படுத்தபடுகின்றனர். ஓட்ஸில் நிறைந்திருக்கும் பீட்டா குலுக்கன் எனப்படும் அதே வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்துகிறது.

oats 1

- Advertisement -

நார்ச்சத்து 

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். இந்த நார்ச்சத்து வயிற்றில் உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும். செரிமான உறுப்புகள் நலம் பெறும்.

ஹைப்பர்டென்ஷன் 

ரத்த அழுத்தம் சராசரி நிலையை கடந்து செல்பவர்களுக்கு ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மிகுந்த மனஅழுத்தம் மற்றும் கோப மனநிலை உண்டாகிறது. ஓட்ஸில் இந்த கடுமையான மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இப்பிரச்சனை கொண்டவர்கள் வாரமொருமுறை ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் அவர்களின் அதீத ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு குறையும்.

உடல் எடை குறைப்பு 

உடல் எடை குறைப்பதற்கு சிறப்பான, பிரதான உணவாக ஓட்ஸ் இருக்கிறது. ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். தினமும் இருவேளை ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இன்னும் அதிசீக்கிரத்தில் உடல் எடை குறைகிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது.

தூக்கமின்மை 

உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவார்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள் கொண்டவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. ஓட்ஸில் ட்ரிப்டோபான் எனப்படும் வேதிபொருள் நிறைந்திருக்கிறது. இது உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

oats 5

முகப்பரு 

வளரிளம்பருவத்தினர் மற்றும் பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அவர்களின் முகஅழகை கெடுகிறது. சிறிதளவு ஓட்ஸை நீரில் கொதிக்க வைத்த பின்பு அந்த கலவையை நன்கு அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தினமும் செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும்.

மாதவிடாய் 

மாதவிடாய் என்பது மாதந்தோறும் பெண்களின் கருப்பையிலிருந்து கருவுறாத சினைமுட்டைகள் ரத்தத்துடன் வெளியேறும் ஒரு இயற்கை நிகழ்வாகும். இக்காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவர். இச்சமயங்களில் ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வர பெண்களின் உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஓட்ஸில் பீட்டா குளுக்கன் என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவுப்பொருளையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன்கள் உடலின் பல வகையான பிரச்சனைகளை தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், நுண்ணுயிரிகளால் ஏற்பட கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை காக்கிறது.

சத்து மிக்க உணவு 

ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இது உடலுக்கு உடனடி சக்தி கிடப்பதை உறுதி செய்கிறது. குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவாக ஓட்ஸ் இருக்கிறது. உடல்நலம் குன்றியவர்கள் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் உண்ண வேண்டியிருக்கிறது. எனவே நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக ஓட்ஸ் இருக்கிறதுது.