Advertisement

உங்களின் தலைமுடி உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

உங்களின் தலைமுடி உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

மனிதர்களின் உடலின் பிரதான பாகம் தலை ஆகும். அந்த தலைக்கு அழகு சேர்ப்பதும், பாதுகாப்பையும் தருவது “தலைமுடி” ஆகும். தற்காலத்தில் பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்காக தீங்கு விளைவிக்கும் பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி தலைமுடியின் தன்மையை மேலும் கெடுத்து கொள்கின்றனர். தலைமுடி உதிர்வை தடுக்கும் சிறந்த இயற்கை வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காய்

நம் நாட்டில் விளையும் நெல்லிக்காய் தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துகளை அதிகம் கொண்டது. நெல்லிக்காயை நிழலில் காயவைத்து அதனை தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி நன்றாக ஆறவைத்து தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுத்து, உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும்.

தேங்காய்

தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தேங்காயை நன்கு அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு தலைமுடியை நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.

எலுமிச்சை

சிலருக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையோடு, பொடுகு தொல்லையும் ஏற்படுகிறது. இவற்றை தீர்க்க பாதி எலுமிச்சையை தயிருடன் கலந்து தலையில் நன்றாக தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு சீயக்காய் தேய்த்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு தலை முடி உதிர்வும் நிற்கும்.

ஆலிவ் ஆயில்

இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அதற்கு சமமாக ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து பசை போன்று தயாரித்து, அக்கலவையை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.

katralai

கற்றாழை

நமது நாட்டில் விளைகின்ற கற்றாழை ஆங்கிலத்தில் ஆலோ வேரா என்றழைக்கப்படுகிறது. இந்த காற்றாலையிலிருந்து எடுக்கப்படும் ஆலோ வேரா ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து வந்தால் முடிக்கு மிகவும் நல்லது. ஆலோ வேரா இலையை இரண்டாக வெட்டி தலையில் தேய்த்து சில மணி நேரத்திற்கு பிறகு தலையை தண்ணீரில் கழுவ வேண்டும்.

கடுகு எண்ணெய்

வட இந்தியர்கள் தங்களின் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஒரு கப் கடுகு எண்ணையையில் நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளை போட்டு அந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக்கொண்டு தங்களின் தலையில் தேய்த்து கொள்வார்கள். இது அவர்களின் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.

Vendhayam

வெந்தயம்

தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.

வெங்காயம்

சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து, அந்த இடத்தில் வழுக்கை ஏற்பட்டது போன்ற நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை நன்கு தேய்த்து பிறகு அந்த இடத்தில் சிறிது தேனை தடவி வந்தால் முடி மீண்டும் முளைக்கும்.

Pasalai keerai

பசலை கீரை

நமது நாட்டில் கிடைக்கும் கீரை வகைகளில் பசலை கீரையும் ஒரு வகையாகும். இக்கீரைகளில் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே தினமும் சாப்பிடும் உணவுகளில் பசலை கீரையும் இடம்பெறுமாறு பார்த்து கொள்வதால் தலைமுடி உதிர்வை தடுக்க முடியும்.

கொத்தமல்லி

நமது அன்றாட உணவுகளில் தவறாமல் இடம்பெறும் ஒரு கீரை வகையாக கொத்தமல்லி இருக்கிறது. புதிதாக பறிக்கப்பட்ட கொத்தமல்லி கீரையின் இலைகளை மென்று சாப்பிடுவதால் தலைமுடியின் வளர்ச்சி மேம்படும். கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, அதை தலையில் தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்தாலும் தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.