சத்துகள் நிறைந்த முள்ளங்கி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலக சுகாதார நிறுவனம் உலகெங்கிலும் வாழும் மக்கள் கீரை வகை உணவுகளை அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும் வேண்டும் என வலியுறுத்துகிறது. உலகெங்கிலும் பல வகையான கீரை வகைகள் இருக்கின்றன. நம் நாட்டிலும் 40க்கும் மேற்பட்ட வகையான கீரைகள் இருக்கின்றன. அதில் ஒரு சில கீரைகள் மட்டுமே மக்கள் அனைவரும் உண்கின்றனர். கீரை வகைகளில் முள்ளங்கிக் கீரை ஒன்றாக இருக்கிறது இக் கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முள்ளங்கி கீரை நன்மைகள்
உடல் எடை குறைய
உடல் எடை கூடுவது எதிர்காலத்தில் பல நோய்களை வரவழைக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கி கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
கண்கள்
நமது உடலில் அதிகம் பாதுகாத்து கொள்ள வேண்டிய ஒரு உறுப்பு கண்கள் ஆகும். கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கண் பார்வை கூர்மையாகவும் இருக்க புரதம் குறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். முள்ளங்கி கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். கண் பார்வையை கூர்மையாக்கும்.
மூலம், மண்ணீரல்
நெடுநாட்களாக இருக்கும் மலச்சிக்கல் மூலம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் மண்ணீரல், கல்லீரல் போன்றவைகளின் செயல்பாடுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பதில் முள்ளங்கி கீரை சிறப்பாக செயல்படுகிறது. தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முள்ளங்கி கீரை சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
ஊட்டச்சத்து
மற்ற கீரை வகைகள் போலவே முள்ளங்கி கீரையிலும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. முள்ளங்கி கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் தேவையான இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் ஏராளம் உள்ளன எனவே இக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஊட்டச்சத்து தேவையை தீர்க்கலாம்.
சிறுநீரகங்கள்
இதயம் எந்த அளவிற்கு முக்கியமான ஒரு உறுப்பாக இருக்கிறதோ, அதற்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக சிறுநீரகங்கள் இருக்கின்றன. இதயத்தை காட்டிலும் ஒருவர் சிறுநீரக பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இயங்க செய்வதில் முள்ளங்கி கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரக சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
சுவாசக் கோளாறுகள்
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. இது எதிர்காலத்தில் சுவாச சம்பந்தமான பல வியாதிகளை ஏற்படுத்திவிடுகின்றன. முள்ளங்கி கீரையை பக்குவப்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு சுவாசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
பூச்சி கடி
இருட்டில் வெளியே செல்லும் போதும், புதர்களுக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் போதும் சில விஷ பூச்சிகள் கடித்து விடுவதால் நமது தோலில் வீக்கம், அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த பூச்சிக்கடிகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. முள்ளங்கி கீரையையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் பூச்சி கடி விஷம் மற்றும் ஒவ்வாமை நீங்கும்.
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித் தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் விரைவில் தீரும்.
மலச்சிக்கல்
தினம் இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது மலம் கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் ஏற்பட்டால் பின்னாட்களில் பல நோய்கள் ஏற்படுவதற்கு அடித்தளமாக அமைகிறது. நெடுநாட்கள் மலச்சிக்கலை போக்கவும், செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரவும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது.
இதயம்
இதயம் நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் நலமாக இருந்தால் உடலில் பலமும், ஆரோக்கியமும் இருக்கும். இதயத்தை பலப்படுத்துவதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக முள்ளங்கிக்கீரை இருக்கிறது. எனவே வாரம் குறைந்தபட்சம் ஒருமுறையாவது முள்ளங்கிக்கீரையை பக்குவப்படுத்தி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.