Advertisement

மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்

மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்

இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் மலச்சிக்கல். மலசிக்கல் ஏற்பட்டால் ஒருவரால் எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது என்பது நாம் அறிந்ததே.

vayiru vali

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:

பீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அறிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 :

மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

குறிப்பு 2 :

மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

Thiripala suranam

குறிப்பு 3 :

மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.

குறிப்பு 4 :

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

குறிப்பு 5 :

நார் சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.