Advertisement

ஆப்பமாவு‌ இப்படித்தான் அரைக்கனும்! கூடை வடிவத்தில், ஆப்பம் சூப்பரா வர, ஒரே ஒரு டிப்ஸ் இருக்கு. அது என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஆப்பமாவு‌ இப்படித்தான் அரைக்கனும்! கூடை வடிவத்தில், ஆப்பம் சூப்பரா வர, ஒரே ஒரு டிப்ஸ் இருக்கு. அது என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

நிறைய பேருக்கு ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே கடைகளுக்கு சென்று விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், வீட்டில் ஆரோக்கியமாக, சுவையாக செய்து சாப்பிடுவதற்கு தெரியாது. ஆனால், இட்லி தோசையை விட ஆபத்தை சுலபமாக சுட்டு விட முடியும். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

appam

ஆப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பச்சரிசி-2 கப்

தேங்காய்-2 கப்

வெந்தயம்-1/4ஸ்பூன்

உளுந்து-ஒரு கைப்பிடி அளவு

2 கப் அரிசி அளவு என்பது, நீங்கள் அரிசியை அளக்க பயன்படுத்த வைத்திருக்கும், ஆழாக்கு அல்லது டம்ளரில் அளந்து கொள்ளலாம். பச்சரிசி கடையிலிருந்து வாங்கும்போது, ‘மாவு பச்சரிசி’ என்று கேட்டு வாங்க வேண்டும். அது பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். அந்த பச்சரிசியில் செய்ததால் தான் ஆப்பம் நன்றாக வரும். அந்த பச்சரிசியோடு, ஒரு கைப்பிடி அளவு உளுந்து, 1/4 ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து, மூன்று முறை நன்றாக கழுவிய பின்பு, நல்ல தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

arisi-alavai

ஊறவைத்த அரிசியை மிக்ஸியிலும் அரைத்துக் கொள்ளலாம். கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவை அரைக்கும் போது முக்கால் பாகம் அரைந்தவுடன், அதாவது பொடி ரவை பதத்தில் நறநறவென்று இருக்கும் போது, அந்த மாவிலிருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் ஒரு கடாயில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த இரண்டு டேபிள்ஸ்பூன் மாவானது, அப்படியே இருக்கட்டும். இப்போது மிக்ஸி ஜாரில், முக்கால் பாகம் அரைபட்டு இருக்கும் ஆப்ப மாவுடன், தேங்காய் துருவலை சேர்த்து, மைய மொழுமொழுவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். தண்ணீருக்கு பதிலாக தேங்காய் உடைத்த தண்ணீர் இருந்தால், அதை சேர்த்து அரைத்தால் ஆப்பம் இன்னும் சுவையாக வரும். தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக, ஆப்பமாவு இருக்க வேண்டும். அதற்காக இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாகவும் அரைக்கக் கூடாது. இட்லி மாவிற்க்கும் தோசை மாவிற்கும் நடு நிலையில் அரைத்துக் கொள்ளுங்கள்.

coconut

இப்போது கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நறநறவென்று அரைத்து வைத்திருக்கும் மாவு இருக்கின்றது அல்லவா? அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவை, நீர்க்க, தண்ணீராக கரைக்க போறீங்க அவ்ளோதான்! அதன் பின்பு அடுப்பை பற்றவைத்து, அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கரைசலை கைவிடாமல் கலக்கிக் கொண்டு வந்தீர்கள் என்றால், அது கொழகொழவென்று, பசை பதத்திற்கு வந்துவிடும்.

பசை போல் இருக்கும் இந்த மாவை, நீங்கள் அரைத்த ஆப்ப மாவோடு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். பசை போல் இருக்கும் அந்த மாவு உருண்டை உருண்டையாக இருக்கும். அது ஆப்பமாவில் தட்டுப்படாமல் நன்றாக கரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (உங்களுக்கு இப்படி செய்வதற்கு கஷ்டமாக இருந்ததால், இந்த பசை மாவு செய்வதற்கு பதிலாக, உங்கள் வீட்டில் புழுங்கல் அரிசி வடித்த சாதம் இருந்தால், அதை 1/2 கப் அளவு எடுத்து, பச்சரிசி தேங்காயோடு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளலாம்.

rice-satham

இப்போது நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஆப்ப மாவானது 8 மணி நேரம் புளிக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து அந்த மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சர்க்கரையும், கால் ஸ்பூன் அளவு உப்பும் சேர்த்து நன்றாக கரைத்து ஆப்பகடாயில் ஆப்பம் உற்றிப் பாருங்கள் சூப்பரான வெள்ளை ஆப்பம் ரெடி.

இந்த மாவை தோசைக்கல்லில் வார்த்தும் சாப்பிடலாம். ஆப்பக் கல்லில், அப்பமாக ஊற்றியும் சாப்பிடலாம். தோசைக்கல்லில் ஊற்றுவதற்கு முன்பு, தோசைக் கல் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். துணியில் எண்ணெய் தொட்டு, தோசைக்கல்லில் நன்றாக தேய்த்து பின்பு ஆப்பம் ஊற்ற வேண்டும். தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிதாக எல்லாம் தேய்க்க கூடாது‌. ஒரு கரண்டி மாவு எடுத்து கல்தோசை போல் ஊற்றி விட வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை அதை மூடிப் போட்டு மூடிவிட வேண்டும். ஆபத்தை திருப்பிப் போடக் கூடாது.

appam

இதேபோல் ஆப்ப கடாயில் ஊற்றினாலும், ஆப்ப கடாய் நன்றாக சூடாக வேண்டும். கடாயில் எண்ணெய் தடவிவிட்டு பிறகு ஆப்பம் ஊற்ற வேண்டும். மேலே மூடி போட்டு தான் வேக வைக்க வேண்டும். ஆப்பம் எப்படி ஊற்ற வேண்டும் என்று, பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆப்ப கடாயில் ஊற்றும் போது மாவு கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும்பட்சத்தில் சுவையான ஆப்பம் எந்த ஒரு சோடா உப்பு சேர்க்காமல் சாஃப்ட்டாக வரும். உங்களுக்கு பிடித்தமான குழம்போடு இந்த ஆபத்தை பரிமாறி பாருங்கள்!