Advertisement

கண் பார்வை சரியாக பாட்டி வைத்தியம்

கண் பார்வை சரியாக பாட்டி வைத்தியம்

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற குறைபாடுகளை நாம் உணவு மூலமே சரியலாம். அந்த வகையில் கண் பார்வை சரியாக சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.

kan parvai sariyaaga

குறிப்பு 1 :

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

குறிப்பு 2 :

ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

malai vazhai palam

குறிப்பு 3 :

பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

குறிப்பு 4 :

ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

குறிப்பு 5 :

50 மில்லி அருகம்புல் சாறோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.

arugambul saaru

குறிப்பு 6 :

கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.

இது தவிர கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் சிறு பயிற்சி செய்தல், கணினி பயன்படுத்துவோர் அவ்வப்போது கண்களை இமைப்பது போன்றவற்றின் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.