Advertisement

வல்லாரை கீரை பயன்கள்

வல்லாரை கீரை பயன்கள்

நமது நாட்டின் பாரம்பரிய உணவுகளை சமைக்கும் போது அதில் ஒரு பகுதியாக கீரை உணவுகள் இடம் பெறுவது இயல்பு. எந்த வகையான கீரைகளும் உடல்நலத்திற்கு மிகுந்த நன்மைகளை தருபவை தான். இதில் பல மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றன. அப்படி பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக “வல்லாரை கீரை” இறக்கிறது. இந்த வல்லாரை கீரையின் மகத்துவங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vallarai

வல்லாரை கீரை பயன்கள்

ஞாபகசக்தி 

வல்லாரை கீரை என்றாலே அனைவர்க்கும் நினைவிற்கு வருவது இக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் ஞாபக சக்தி பற்றியதாகும். குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரமொருமுறை வல்லாரை கீரையை பக்குவம் செய்து சாப்பிட கொடுப்பதால் அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டப்பெற்று ஞாபகசக்தி மற்றும் சிந்தனை திறனை அதிகம் வளர்கிறது.

நரை முடி 

வல்லாரை ஒரு சிறந்த சித்த மருத்துவ மூலிகை ஆகும் முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. இந்த சூரணத்தை ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.

vallarai

இருமல், சளி 

குளிர்காலங்களில் பலருக்கும் நெஞ்சில் சளி சேர்ந்து இருமல், சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. இப்பிரச்சனையை போக்க வல்லாரை கீரையோடு தூதுவிளை இலைகளை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர சயரோகம், இருமல் சளி போன்ற சுவாச நோய்கள் முற்றிலும் குணமாகும்.

யானைக்கால் வியாதி 

சாக்கடையில் இருந்து உற்பத்தியாகும் ஒரு வகை கொசு கடிப்பதால் யானைகால் நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ஆங்கில வழி மருத்துவம் செய்து கொள்ளும் அதே நேரத்தில் வல்லாரை கீரையின் இலைச்சாறு தினந்தோறும் 5 மி.லி.காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் யானைக்கால் வியாதி மற்றும் அந்நோய் பாதிப்பால் ஏற்ப்படும் விரைவாதம் நோயும் நீங்கும்.

vallarai

கட்டிகள், புண்கள் 

பலருக்கு உடல் அதிக வெப்பமடைவதால் கட்டிகள் ஏற்பட்டு புண்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகின்றன. மற்ற சிலருக்கு அடிபடுவதாலும் ரத்த காயங்கள் ஏற்பட்டு புண்கள் உண்டாகி மிகுந்த வழியை ஏற்படுத்துகின்றன. வல்லாரை கீரையின் இலைகளை ஆமணக்கெண்ணையில் வதக்கி புண்கள், கட்டிகள் மேலே பற்றிடுவதால் அவை சீக்கிரம் ஆறும்.

ஜுரம், காய்ச்சல் 

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவிழக்கும் போது பல வகையான ஜுரங்கள், காய்ச்சல் போன்றவை நமக்கு ஏற்படுகின்றன. வல்லாரை கீரையோடு உத்தாமணி மற்றும் மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் அனைத்து வகையான காச்சலும் தீரும்.

vallarai

நீர் சுருக்கு 

கோடை காலங்களில் பலருக்கும் ஏற்படும் பிரச்சனை தான் நீர் சுருக்கு அல்லது நீர் எரிச்சல். தண்ணீரை சரியான அளவில் குடிப்பவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்சனை ஏற்படுவதில்லை. இத்தகைய நீர் சுருக்கு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வல்லாரை மற்றும் கீழாநெல்லி சமஅளவு எடுத்து, அரைத்து சுண்டக்காயளவு காலை வேளையில் மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

குரல் வளம், மூளை 

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். அது போல் சிலருக்கு தொண்டை கட்டு, குரல் வளம் குறைவு போன்றவை இருக்கின்றன. இவையனைத்தும் தீர வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடுவதால் மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் ஆகியவற்றை கொடுக்கும்.

vallarai

மாதவிடாய் 

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. இதற்கு வல்லாரை கீரையோடு உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

குஷ்ட ரோகம் 

குஷ்ட ரோகம் அல்லது தொழு நோய் எனப்படும் கொடுமையான வியாதியை போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது போன்றவற்றை தவிர்த்து பத்தியம் இருந்து வந்தால் குட்டம் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.