Advertisement

தோல் நோய்கள் நீங்க பாட்டி வைத்தியம்

தோல் நோய்கள் நீங்க பாட்டி வைத்தியம்

பலருக்கு தோளில் தேமல், சிறு கொப்பளம், அரிப்பு, படை போன்ற ஏதாவது ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இது பிறருக்கு தொற்றக்கூடிய நோய்களாக உள்ளது. பிறரது சோப்பை உபயோகிப்பது பிறரது துணியை அல்லது துண்டை உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் தோல் நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் தோல் நோய்கள் ஏற்பட கூடும். இந்த தோல் நோய்களை விரட்ட சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

skin disease

குறிப்பு 1 :

தோல் அரிப்பு, சொறி போன்றவை குணமாக 15 முதல் 20 குப்பைமேனி இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு அரை டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும். பிறகு ஒரு இரும்பு சட்டியை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் நாம் இடித்துவைத்துள்ள மூலிகையை போட்டு சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும். பிறகு இதை ஆற வைத்து ஒரு கிண்ணத்திலோ அல்லது பாட்டிலிலோ சேமித்து வைத்துக்கொள்ளலாம். நமது உடலில் எங்கெல்லாம் சொறி, அரிப்பு போன்றவை உள்ளதோ அந்த இடங்களில் இதை ஒரு வாரம் தடவி வந்தால் சொறி, அரிப்பு போன்றவை சரியாகும்.

குறிப்பு 2 :

கீழாநெல்லி இலையை நன்கு அரைத்து உடலில் எங்கெல்லாம் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொண்டு 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அரிப்பு சரியாகும். அதேபோல தோலில் ஏதாவது புண் இருந்தலும் இந்த மூலம் குணமாகும்.

keezhanelli

குறிப்பு 3 :

உடலில் உள்ள தேமல் நீங்க கீழாநெல்லி உதவுகிறது. கீழாநெல்லி மற்றும் கொத்துமல்லி இலை ஆகிய இரண்டையும் பால் விட்டு அரைத்து தேம்பல் இருக்கும் இடங்களில் பூசி பதினைந்து முதல் 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். அதே போல மலைவேம்பு சாறை பிழிந்து தேம்பல் இருக்கும் இடத்தில் விட்டால் தேமல் குணமாகும்.

குறிப்பு 4 :

உடலில் உள்ள அரிப்பு மற்றும் தடிப்புகள் சரியாக தினமும் காலை மாலை என இரு வேலையும் கருந்துளசியோடு 3 மிளகு சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் தடிப்பு சரியாகும்.

குறிப்பு 5 :

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதில் நசுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதை ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் படர்தாமரை இருக்கும் இடத்தில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து குளித்துவந்தால் படர்தாமரை நீங்கும்.

Garlic(Poondu)

குறிப்பு 6 :

முருங்கை இலையை பறித்து அதில் இருந்து நன்கு சாறு பிழிந்து அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து படை இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேலை தடை வந்தால் படை குணமாகும்.

குறிப்பு 7 :

வெற்றிலை மற்றும் துளசி இலையை சேர்த்து நன்கு அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் தேமல் நீங்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளில் உங்களுக்கு தேவையானதை பயன்படுத்தி தோல் நோயில் இருந்து விடுபடலாம்.