Skip to main content

மங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

மங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப செடிகள், மரங்கள் வளர்கின்றன. ஆனால் அவை வேறு எந்த நாட்டின் சீதோஷ்ண நிலையிலும் வளருவதில்லை. அப்படிப்பட்ட மரங்கள் மனிதர்கள் உண்பதற்கு சுவையான பழங்களை தருகின்றன. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் சாப்பிடப்படும் ஒரு பழமாகும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது. மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mangustan

மங்குஸ்தான் பழம் நன்மைகள்

உடல் எடை கூட 

நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

வைட்டமின் சி

மங்குஸ்தான் பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

mangustan

மூலம்

மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் மங்குஸ்தான் பழங்கள் மற்றும் மங்குஸ்தான் பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.

இதய நோய்கள்

நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

mangustan

மலச்சிக்கல்

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். மங்குஸ்தான் பழங்களை அல்லது மங்குஸ்தான் பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

கொலஸ்ட்ரால்

உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

mangustan

கல்லீரல்

மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.

கண்பார்வை

நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் மங்குஸ்தான்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே மங்குஸ்தான் பழங்களை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.

mangustan

சரும நலம் 

வயதாவதாலும், ஊட்ட சத்தில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்கு தோல் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கங்களும், வயதான தோற்றமும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும்.

வயிறு நலம், செரிமான சக்தி 

மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் மங்குஸ்தான் பழம் பேருதவி புரிகிறது.

Comments