Advertisement

தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் பல வகையான சமையல் முறைகள் இருக்கின்றன. ஆனால் எப்படிப்பட்ட சமையலிலும் உடல்நலத்திற்கு தேவையான பல மூலிகை பொருட்கள் அந்த சமையல் சேர்க்கப்பட்டு நமது மக்களால் உண்ணப்படுகிறது. அதில் அன்றாடம் சேர்க்கப்படும் ஒரு மூலிகையாக கறிவேப்பிலை இருக்கிறது. இந்த கறிவேப்பிலையை அன்றாடம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

கறிவேப்பிலை பயன்கள்

செரிமான சக்தி 

பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.

புற்று நோய் 

கறிவேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் மற்றும் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல், வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

சொரியாசிஸ் 

தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் கடுகு எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. உணவில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.

தலைமுடி 

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை போக்குவதற்கு அதிகம் கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலை ஊற வாய்த்த தேங்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலும் மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

ரத்த சோகை 

உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்குண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் குறையும் பொது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

விஷ கடி 

நமது வீட்டிலும் அல்லது நமது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டங்கள், புதர்களிலும் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இதற்கு உடனடியாக சிறிது கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் மேற்கூறிய விஷ ஜந்துக்களின் கடியால் உடலில் பரவும் அவற்றின் நச்சு முறியும்.

நீரிழிவு 

நீரிழிவு ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக கறிவேப்பிலை இருக்கிறது இது கசப்பு தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்டவுடன் சீக்கிரத்திலேயே செயல்புரிந்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது. கறிவேப்பிலை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும்.

கல்லீரல்

மாவுசத்து நிறைந்த உணவுகளை தினமும் அதிகளவு சாப்பிட்டு வருபவர்களுக்கும், தீவிர மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு தினமும் கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

மூலம்

அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் கறிவேப்பிலை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் கறிவேப்பிலையை அடிக்கடி உண்ண வேண்டும்.

இதயம் 

உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.