Advertisement

தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

தலை வலி வர பல காரணங்கள் உள்ளன. ஜலதோஷம் காரணமாக தலை வலி ஏற்படலாம், சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் மூலம் தலைவலி ஏற்படலாம், அதிக கோவம் கொண்டால் தலை வலி ஏற்படலாம், அதிக சத்தம் உள்ள இடத்தில இருந்தால் தலை வலி ஏற்படலாம். இப்படி தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தலை வலி நீங்க சித்த மருத்துவம் கூற சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

Head ache(thalaivali)

குறிப்பு 1 :

துளசி, சுக்கு போன்றவை இயற்க்கை நமக்கு தந்த வரப்ரசாத மூலிகைகள். இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம். துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.

குறிப்பு 2 :

சிலருக்கு உடல் உஷ்ணத்தால் கூட தலைவரை ஏற்படும். அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் சூட்டல் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

Seeragam

குறிப்பு 3 :

பால், இஞ்சி சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் கலந்து சூடு செய்து தலைக்கு தடவி ஒரு ஐந்து நிமிந்து நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் தலை வலி நீங்கும். நீண்ட காலம் தலை வலி உள்ளவர்கள் இதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வரலாம்.

குறிப்பு 4 :

பலரை ஒற்றை தலைவலி நெடு நாட்களாக வாட்டி வதைக்கும். அவர்களுக்கான ஒரு எளிய தீர்வு என்னவென்றால் ஒரு துண்டை எடுத்து அதை பச்சை தண்ணீரில் நனைத்து தலை மற்றும் கழுத்து பகுதியில் கட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு கை மற்றும் கால்களை அதில் விடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி நீங்கும்.

hot water(sudu thanneer)

குறிப்பு 5 :

நொச்சி இலை சாறு தலைவலியை போக்கக்கூடியது. ஆகையால் நொச்சி இலையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதை நெற்றியின் இருபுறம் மட்டும் தடவினால் தலைவலி நீங்கும்.

குறிப்பு 6 :

சூரிய உதயம் ஆகும் சமயத்தில் எருமை பாலேடு வெள்ளை எள்ளை சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு சூரிய ஒளியில் காட்டினால் தலைவலி நீங்கும்.

milk

குறிப்பு 7 :

வில்வ இலைக்கு நீண்ட நாள் தலைவலியை குணமாக்கி மருத்துவ குணம் உண்டு. வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருவது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த தலைவலி நீங்கும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தலைவலியை எளிதில் குனிமாக்கலாம். வேறு சில நோய்களால் தலைவலி ஏற்பட்டாலோ அல்லது தலைவலியோடு சேர்ந்து வாந்தியும் இருந்தாலோ மருத்துவரை அணுகுவதே சிறந்தது.